பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பகற்‌ கொள்ளைக்காரரா்‌

223

வது அசாத்தியம். அவர்கள் பழைய ஆடையைப் புதிதாக்கி, வெள்ளையைக் கறுப்பாக்கி, கறுப்பைச் சிவப்பாக்கி இந்திரஜால வித்தை செய்கிறார்கள். நல்ல வஸ்திரத்தைக் காட்டி அதற்குத் தக்க விலை வாங்கிக்கொண்டு, மட்ட வஸ்திரத்தைக் கொடுக்கிறார்கள். ஒரு வஸ்திரத்தை வைத்துக் கொண்டு கோடி வஸ்திரம் என்கிறார்கள். ஒரு ரூபாய்க்கு வாங்கின துணியைப் பத்து ரூபாய்க்கு வாங்கினதாகப் பட்டோலை காட்டுகிறார்கள். அவர்களுடைய மோசத்துக்குப் பயந்துகொண்டே ஆடு, மாடு முதலிய மிருகங்களும், பக்ஷிகளும் நிர்வஸ்திரமாயிருக்கின்றன. ஜைன விக்கிரகம் நிர்வாணமாயிருப்பதற்கும் சிவன் புலித்தோலையும் யானைத்தோலையும் தரித்துக் கொண்டதற்கு அது தான் காரணம்.

இரத்ந வியாபாரிகள் செய்யும் மாறுபாடுகள் அபாரம் அல்லவா? செங்கல்லை மாணிக்கமென்றும், வெண்கல்லை வயிரமென்றும், பசுங்கல்லை மரகதமென்றுஞ் சொல்லி அவர்கள் சகலரையும் ஏமாற்றவில்லையா? அந்தக் கற்களுக்கு மாற்று, உரை, நிறை இல்லாதபடியால் “கடல் மீனுக்கு நுழையனிட்டதே சட்டம்” என்பதுபோல, அந்த வியாபாரிகள் வாய்கொண்டமட்டும் விலை கூறி எத்திப் பறிக்கவில்லையா? சில பொடிகளைக் கையில் வைத்துக்கொண்டு கோடி பொடிகளென்று கோடி பொய்கள் சொல்லுகிறார்கள். அந்தக் கற்கள் பிரகாசியாவிட்டால் பாடவேளையில்லை யென்கிறார்கள். அவைகள் ஸ்வயம் பிரகாசம் உள்ளவைகளாயிருந்தால் எந்த வேளையிலும் பிரகாசியாமலிருப்பதற்குக் காரணம் என்ன? பல வியாபாரிகள் கூடி விலை மதிக்கும்போது, அவர்கள் சகலரும் அறிய வாயினாற் பேசிக்கொள்ளாமல் கைகளைத் துணியினால் மறைத்துக்கொண்டு, கைகளாற் பேசுகிறார்கள். அன்றியும் அவர்கள் பேசுவது பரிபாஷையே யல்லாமல் சரியான பாஷையிற் பேசுகிறதில்லை. அந்தக் கற்கள் உலகத்தில் இல்லாமற் போனால் யாருக்கு என்ன