பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பகற் கொள்ளைக்காரர்‌

225

கட்டளைக் கலித்துறை

ஒட்டாக வொட்டியுங் காற்பொன்னின் மாப்பொன்னு பாயமதாத்
தட்டா திரான்பணி செய்யா திரான்செம்பொன் மேருவினைக்
கட்டாகக் கட்டிக் கடுவள வாநிறை காட்டவல்ல
தட்டானுக் கஞ்சியல் லோஅணிந் தான்சிவன் சர்ப்பத்தையே.

தட்டார்கள் எட்டு நாளையில் ஒரு நகை செய்து கொடுப்ப தாக ஒப்புக்கொண்டால், எட்டு வருஷத்திலுங் கொடார்கள். அவர்கள் சொல்லும் சாக்குகளும் போக்குகளும் ஜாலங்களும் தெரியும் பொருட்டுப், பூர்வீக சங்கராசாரியார் காலத்தில் நடந்த ஒரு விசேஷத்தைத் தெரிவிக்கிறேன். சகல சாஸ்திரங்களிலும் வித்தைகளிலுந் தொழில்களிலும் நிபுணரான அந்த சங்கராசாரியார் பல தொழிலாளிகளும் வந்து தம்மைப் பரீக்ஷிக்கும்படி விளம்பரஞ் செய்தார். அந்தப் பிரகாரம் பலரும் வந்து அவரைப் பரீக்ஷித்தது மன்றி. தட்டாரும் அவரைச் சோதிக்க வந்தார்கள். அவர் தட்டார்களைப் பார்த்து எட்டு நாளைக்குப் பிறகு வரும்படி ஆக்ஞாபித்தார். அவர்கள் அந்தப்படி வந்தார்கள். நாலு நாளைக்குப் பிறகு வரும்படி மறுபடியும் உத்தரவு செய்தார். அவர்கள் அந்தப் பிரகாரமும் வந்தார்கள். இரண்டு நாளைக்குப் பிறகு வரும்படி உத்தரவு செய்து அந்தப்படிக்கு வந்து அலைந்தார்கள். பிறகு ““நாளைக்கு வாருங்கள்! நாளைக்கு வாருங்கள்!” என்று அநேக மாசக்காலம் அவர்களை அலைக்கழித்தார். இந்தப் பிரகாரம் இழுத்துவிடுவது கம்மாளர்களுடைய வழக்கமானதால் அவர்கள் சங்கராசாரியாரைப் பார்த்து “ஸ்வாமி! எங்களுடைய வித்தை உங்களுக்குப் பூரணமாய் வந்து விட்டது. இனி மேல் உங்களைப் பரீக்ஷிக்க வேண்டுவதில்லை”” என்று

15