பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226

பிரதாப முதலியார் சரித்திரம்

சொல்லி யோக்கியப் பத்திரிகை கொடுத்து விட்டுப் போய் விட்டார்கள். வஸ்திர வியாபாரமும், ரத்ந வியாபாரமும், தட்டார் தொழிலும் உலகத்தில் நடப்பது ஸ்திரீகள் பொருட்டாகவே யல்லாமல் மற்றப்படி அல்ல. உலகத்தில் ஸ்திரீகள் இல்லாமலிருந்தால் அந்த வியாபாரிகள் இல்லாமற் போனால் ஸ்திரீகளுடைய ஜபம் நடக்குமா?

அரசர்கள் தேசங்களைத் திருடுகிறதுபோலப் பெரிய பெரிய மிராஸ்தார்கள் தங்களுக்கு அடுத்த சின்ன மிராஸ்தார்களுடைய நிலங்களைக் கொஞ்சங் கொஞ்சமாய்த் திருடிச் சேர்த்துக் கொள்கிறார்களே! இந்த ஸ்தாவரத் திருட்டைப் பார்க்கிலும் எங்களுடைய ஜங்கமத் திருட்டு மீசரமா?

நான் இது வரையில் மனுஷர்களுடைய சொத்தைத் திருடுகிற திருடர்களைப் பற்றிப் பிரஸ்தாபித்தேன். தெய்வ சொத்தைத் திருடுகிற திருடர்கள் எத்தனையோ பெயர்கள் இருக்கிறார்கள். தேவாலயம், தர்ம சத்திரம் முதலியவைகளின் விசாரணைக் கர்த்தர்களும், மற்ற உத்தியோகஸ்தர்களும் தினந்தோறும் அடிக்கிற கொள்ளைகள் எண்ணித் தொலையுமா? ஏட்டில் அடங்குமா? இப்படியாக உலகத்தில் எண்ணிக்கை யில்லாத பகற் கொள்ளைக்காரர்கள் இருக்க அவர்களையெல்லாந் தண்டிக்காமல் விட்டு விட்டுத் தரித்திரத்தின் கொடுமையினால் திருடப் புகுந்த என் மேலே தாங்கள் குற்றம் பாரிப்பது தர்மமா?” என்றான். இதைக் கேட்டவுடனே தேவராஜப் பிள்ளை அந்தத் திருடனுடைய குடும்ப ஸ்திதியைப் பற்றியும், அவனுடைய யோக்கியதையைப் பற்றியும் பல பெயர்களை விசாரித்தார். அவனுடைய குடும்ப விஷயத்தைப் பற்றி அவன் சொன்னதெல்லாம் வாஸ்தவமென்றும் தெரிந்து கொண்டு அவனைப் பார்த்துச் சொல்லுகிறார்:— ““நீ குற்றத்தை ஒப்புக்கொள்ளுகிறபடியால் உன்னைத் தண்டிக்காமல்