பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குணபூஷணி வரலர்று

227

விடுவது நியாயப் பிரமாணத்துக்குச் சரியாயிராது. ஆயினும் நீ செய்த குற்றத்தின் பளுவைக் குறைக்கும்படியான சில சாதகங்கள் உன் பக்ஷத்தில் இருக்கிறபடியால் ஒரு மாசமட்டும் நீ வெறுங்காவலிலிருக்கும்படி அற்பமாகத் தீர்மானிக்கிறோம். யுபல நாளைத் திருடன் ஒரு நாள் அகப்படுவான்ரு என்கிற பழமொழிப்படி நீ சொன்ன பகற் கொள்ளைக்காரர்கள் ஒரு நாள் அகப்பட்டுத் தண்டிக்கப் படுவார்கள். அவர்களுடைய தண்டனை உன்னுடைய தண்டனையைப் போல அற்பமாயிராது” என்றார். அந்தத் திருடன் காவற்கூடத்திலிருந்து விடுதலையான உடனே தேவராஜப் பிள்ளை அவனுக்கு ஒரு கிராமச் சேவகஞ் செய்துகொடுத்து அவன் பிரமாணிக்கமாய் வேலை பார்த்து வருகிறான். அந்தத் திருடனுக்கு முடிவில் நல்ல கதி வாய்த்தது போல் அவன் சொன்ன பகற்கொள்ளைக் காரர்களுக்கும் முடிவில் நல்ல கதி வாய்க்குமா என்பது சந்தே காஸ்பதமா யிருக்கிறது.




33-ஆம் அதிகாரம்
குணபூஷணி சரித்திரம்—மூத்தாள் மகனை
இளையாள் கொடுமை செய்தது
திருட்டுக் கலியாணம்


ஆதியூரில் அருமை நாதபிள்ளை என்பவன் ஒருவன் இருந்தான். அவன் சனியனை விலைக்கு வாங்குவது போல், ஏக காலத்தில் இரண்டு தாரங்களை மணம் செய்துகொண்டான். அந்தத் தாரங்கள் இருவருஞ் சகோதரி-