பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242

பிரதாப முதலியார் சரித்திரம்

நான் மலை முகட்டிற் சேர்ந்தவுடனே அந்தப் பக்கத்தில் இறங்குவதற்கு வழியிருக்கிறதோ வென்று ஆராய்ந்தேன். மலைக்கு வடபுறத்தில் மனுஷர்கள் ஏறும்படியாகவும் இறங்கும்படியாகவும் படிகள் வெட்டப் பட்டிருந்தன. அவைகளைப் பார்த்தவுடனே எனக்குச் சந்தோஷம் உண்டாகி அந்தப் படிகளின் வழியாக இறங்க ஆரம்பித்தேன். நான் ஒருநாட் பகலும் இரவும் மெள்ள மெள்ள இறங்கி மறுநாள் காலையில் அடிவாரத்தில் வந்து சேர்ந்தேன். அந்த மலை எவ்வளவு உயரமோ அவ்வளவு உயரமான மதிளும் நாக லோகம் வரையில் செல்லாநின்ற அகழியும் உடைய ஒரு பெரிய நகரம் அந்த மலையடிவாரத்திலிருந்தது. நான் கோட்டை வாசலைக் கடந்து தெரு வழியாய்ப் போகும்போது ஒரு சக்கிலியன் இரண்டு ஜோடுகளைக் கையில் வைத்துக்கொண்டு விலை கூறிக்கொண்டு எதிரே வந்தான். அப்போது வெயில் அதிகரித்து பூமியில் கால் வைக்கக் கூடாமலிருந்தபடியால் அந்த ஜோடுகளை வாங்கி என் காலில் மாட்டிப் பார்த்தேன். அவைகள் என் காலுக்குச் சரியாயிருந்தபடியால் நான் அந்தச் சக்கிலியனைப் பார்த்து “உன்னை நான் சந்தோஷப் படுத்துகிறேன். இந்த ஜோடுகளை விலைக்குக் கொடு” என்றேன். அவன் நல்லதென்று சம்மதித்தான். அந்த ஜோடுகள் அரை வராகன் பெறுமானதால் அந்தத் தொகையைச் சக்கிலியன் கையில் கொடுத்தேன். அவன் “எனக்குச் சந்தோஷம் வரவில்லை” என்றான். நான் மறுபடியும் கால் வராகன் கொடுத்தேன். அவன் அதையும் வாங்கிக் கொண்டு “சந்தோஷம் வரவில்லை” என்றான். நான் பின்னும் சில தொகை கொடுத்தேன். அவன் நான் கொடுப்பதையெல்லாம் வாங்கிக்கொண்டு ““சந்தோஷம் இல்லை! சந்தோஷம் இல்லை!”“ என்றான். நான் அவனைப் பார்த்து ““உன்னுடைய ஜோடு எனக்கு வேண்டாம். என்னுடைய பணத்தைக் கொடு”” என்று கேட்டேன். அவன் உடனே என்னைப் பிடித்துக்கொண்டு ““என்னைச் சந்தோஷப்-