பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விக்கிரமபுரி அரசியல் நிலைமை

251

அந்த ஒரு நாளையிற் கெடுகிற குடிகள் ஆயிரத்துக்கு அதிகமாயிருக்கலாம். அவன் நியாயா நியாயங்களைப் பார்த்துத் தீர்மானிக்காமல் குருட்டு நியாயமாக ஆறு மாசம் வரையில் வாதிகள் பக்ஷத்திலும், ஆறு மாசம் வரை பிரதிவாதிகள் பக்ஷத்திலும் தீர்மானிக்கிற வழக்கம். இப்போது வாதிகள் பக்ஷந் தீர்மானிக்கிற காலமானபடியால், நம் மேல் வந்திருக்கிற வழக்குகளை நமக்குப் பிரதிகூலமாகவும் வாதிகளுக்கு அநுகூலமாகவும் தீர்ப்பானென்கிறதற்குச் சந்தேகமில்ல. நாம் பிராணனுடன் வீட்டுக்குத் திரும்பிப்போய் நம்முடைய பெண்ஜாதி பிள்ளைகள் முகத்தில் விழிப்போமென்கிற நம்பிக்கையைக் கட்டோடே விட்டுவிட வேண்டியது தான்” என்றான். இதைக் கேட்ட உடனே எனக்கு உண்டான துயரம் எப்படிப்பட்டதென்றால் அதற்கு முன் ஒருநாளும் அப்படிப்பட்ட துயரத்தை நான் அநுபவித்ததில்லை. தேவராஜப் பிள்ளைக்குச் சாக்ஷி சொன்னதற்காக விசாரணைக் கர்த்தர்கள் விதித்த தண்டனைக்குத் தப்பி, மத யானைக்குத் தப்பி, இந்தப் பாவிகளுடைய ஊரிலே இறக்கவா வந்தோமென்று நினைத்து நினைத்து நெஞ்சம் புண்ணாகிக் கலங்கினேன்.

“”கண் குருடானாலும் நித்திரைக்குக் குறைவில்லை”” என்பது போல் நியாயாதிபதி தினந்தோறும் நியாயசபைக்கு வராவிட்டாலும் அவன் என்றைக்கு வருவானென்கிற நிச்சயந் தெரியாமையினால் நாங்கள் தினந்தோறும் நியாயசபைக்குப் போய் அலைந்து கொண்டு வந்தோம். அவன் இருபது நாளைக்குப் பிறகு ஒரு நாள் விசாரிக்க ஆரம்பித்தான். சக்கிலியனுடைய வழக்கு முதல் வழக்கானதால் நியாயாதிபதி சக்கிலியனுடைய வாதத்தையும் என்னுடைய வாதத்தையும் கேட்டுக்கொண்டு தீர்மானஞ் சொல்லத் தொடங்கினான். நியாயாதிபதி என்னைப் பார்த்து ““சக்கிலியனை சந்தோ