பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264

பிரதாப முதலியார் சரித்திரம்

“நீங்கள் வேட்டை பார்க்கப் போன பிறகு, கானகத்தில் என்ன ஆதங்கள் நேரிடுவோமென்று நான் சித்தாஞ்சல்லியப் பட்டுக்கொண்டிருக்கும்போது, நீங்களும் நீங்கள் ஏறிய யானையும், யானைப்பாகனும் போன வழி தெரியவில்லை யென்றும், நீங்கள் ஆதியூருக்குத் திரும்பி வந்துவிட்டீர்களாவென்று விசாரித்துக் கொண்டு வரும்படி கனகசபை யண்ணன் உத்தரவு கொடுத்ததாகவும் சிலர் வந்து தெரிவித்தார்கள். நீங்கள் ஆதியூருக்குத் திரும்பிவராமையினால் தேவராஜப் பிள்ளையும் இன்னும் அநேகரும் உடனே புறப்பட்டுக் கானகத்துக்குப் போய்த் தேடியும் உங்களுடைய செய்தி ஒன்றும் தெரியவில்லை. வேடர்கள் வேட்டையாடிக் கொண்டிருந்த இடத்துக்கும் யானை நின்ற இடத்துக்கும் அதிக தூரமாகையால் யானை வீறிட்டுக்கொண்டு போன சப்தம் மட்டுந் தங்கள் காதில் விழுந்ததாகவும், அந்த யானை எந்தத் திசை நோக்கி நடந்ததென்பது தெரியாதென்றும் வேடர்களும் மற்றவர்களும் அந்தக் காட்டில் நுழையக் கூடாத இடங்களெல்லாம் நுழைந்து தேடியும் நீங்கள் அகப்படவில்லை. தேவராஜப் பிள்ளை, கனகசபை யண்ணன் முதலானவர்கள் வீட்டுக்குத் திரும்பி வராமல் அந்தக் காட்டிலே கூடாரம் அடித்துக்கொண்டு பல நாள் வரைக்குந் தேடியும் தாங்கள் அகப்படாமையினால், நான் சித்தங் கலங்கி தேக ஸ்மரணை தப்பிப் பைத்தியம் பிடித்தவள்போற் புலம்பிக்கொண்டு திரிந்தேன். தேவராஜப் பிள்ளை முதலானவர்கள் எனக்கு ஆறுதலாகச் சொன்ன வார்த்தைகளெல்லாம் செவிடன் காதிற் சங்க நாதம் செய்தது போல, நிஷ்பலமாகிவிட்டன. நான் சரியான ஆகாரமும் உறக்கமு மில்லாமல் எப்போதும் அழுதுகொண்டு வட திசையை நோக்கிப் பார்த்தவண்ணமாயிருந்தேன். ஒரு நாள் நடுச்சாமத்தில் நான் மேல்மாடியில் உட்கார்ந்துகொண்டு சாளரத்தின் வழியாக வடக்கை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கும்