பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியற்‌ சீர்திருத்தங்கள்‌

289

யெல்லாம் தண்டித்துவிட்டால் குற்றவாளியும் தண்டனையடைவான் என்கிற எண்ணத்துடன், ஊரில் உள்ளவர்களையெல்லாம் தண்டிப்பது கிரமமாயிருக்குமா? அப்படியே துர்வழக்குக்காரன் இன்னனென்று தெரிவதற்கு முன்னமே, அவனைத் தண்டிப்பதற்காக நியாய வழக்குக்காரர்களிடத்திலும் வரி வாங்குவது நியாயமாயிருக்குமா? நியாயஸ்தலங்களில் நூறு வழக்குகள் வந்தால் தொண்ணூறு வாதி பக்ஷத்திலும், பத்துமட்டும் பிரதிவாதி பக்க்ஷத்திலும் தீர்மானிக்கிறது சர்வத்திர சாதாரணமாயிருக்கிறது. அந்தப் பத்துத் துர்வழக்காளிகள் இன்னாரென்று தெரிவதற்கு முன்னமே அவர்களைத் தண்டிப்பதற்காகத் தொண்ணூறு நியாய வழக்காளிகளையும் தண்டிப்பது முறையா? துர்வழக்குகள் வருகிறதற்கு நியாயாதிபதிகளுடைய அறியாமையும் பக்ஷபாதமும் அபரிசுத்தமுமே முக்கிய காரணமாயிருக்கிறது. நியாயாதிபதிகள் தகுந்த சமர்த்தர்களாயும் சாஸ்திர விற்பன்னர்களாயும் அநுபோகஸ்தர்களாயும் நீதிமான்களாயும் இருப்பார்களானால், அவர்கள் முன்பாகத் துர்வழக்குகள் வருமா? வந்தாலும் ஜெயிக்குமா? உலகத்தில் ஆஸ்திவந்தர்கள் ஏழைகள் என்கிற இரண்டு வகுப்பில் ஆஸ்திவந்தர்கள் எந்த வரியாயிருந்தாலும் கொடுத்துவிட்டு வியாஜ்ஜியம் தொடங்குவார்கள். ஆஸ்திவந்தர்களால் துன்பத்தை யடைந்த ஏழைகள் வரி கொடுக்க நிர்வாகமில்லாமையினால், வியாஜ்ஜியஞ் செய்ய அசக்தர்களாயிருப்பார்கள். ஆகையால் வியாஜ்ஜியவரி பணக்காரர்களுக்கு மட்டுஞ் சாதகமாயும் ஏழைகளுக்குத் துன்பமாயுமிருக்கும். இப்படிப்பட்ட பல காரணங்களால் வியாஜ்ஜியவரியை நீக்கி விட்டோம். ஆனால் துர்வழக்குக்காரர்களைக் கண்டிக்க வேண்டியது அகத்தியமானதால், நியாயாதிபதிகள் பூரண விசாரணை செய்து துர்வழக்கென்று அபிப்பிராயப்பட்டால் அந்த வழக்காளி ராஜாவுக்கு அபராதமும், பிரதிவாதி யினுடைய செலவுகளுங் கொடுக்-

19