பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியற் சீர்திருத்தங்கள்‌

291

முந்திய ராஜாங்கத்தில் நியமிக்கப்பட்ட சில அதிகாரிகள், தினந்தோறும் உத்தியோகசாலைக்குப் போகாமல் கார்த்திகைப் பிறை போலவும், வால்நக்ஷத்திரம் போலவும், எப்போதாவது ஒரு காலத்தில் தோன்றி மறைந்து போனார்கள். சில நியாயாதிபதிகள் நியாயசபைக்குப் போகிற நேரம் ஒரே தன்மையாயிராமல் ஒரு நாள் காலையிலும் ஒரு நாள் மத்தியானத்திலும் ஒரு நாள் மாலையிலும் ஒரு நாள் அஸ்தமித்தபின்பும் நியாயசபைக்குப் போகிற வழக்கமாயிருந்தபடியால் வியாஜ்ஜியக்காரர்கள் தாங்கள் எந்த நேரத்தில் நியாயஸ்தலத்துக்குப் போகிறதென்றும் தெரியாமல் அவஸ்தைப் பட்டார்கள். நியாயாதிபதி நேற்றைத் தினங்காலையில் வந்தபடியால் இன்றைய தினமும் காலையில் வருவானென்று வழக்காளிகள் போய்க் காத்திருந்தால் நியாயாதிபதி காலையில் வராமல் கட்சிக்காரர்கள் இல்லாத சமயங்களில் வந்து, கூப்பிட்ட போது கட்சிக்காரர்கள் ஆஜராகவில்லை யென்னுங் காரணத்தால் வியாஜ்ஜியங்களைத் தள்ளிக்கொண்டு வந்தார். கூப்பிட்டபோது ஆஜராகியவர்களுடைய வழக்குகளை விசாரிக்கிறதில்லை. அவர்கள் ஆஜராகாமற்போனால் மட்டும் வழக்குகள் தள்ளப்பட்டன. சில கலெக்டர் தாசில்தார் முதலான அதிகாரிகள் சித்தாதிகளைப் போல இன்றைக்கு ஒரு ஊர் நாளைக்கு ஒரு ஊராகச் சஞ்சரித்து ஒரு ஊரில் மனுக் கொடுத்தவர்களை அதற்குத் தூரமான வேறொரு ஊரிற் கூப்பிட்டு, அவர்கள் காத்திருக்கவில்லை யென்னுங் காரணத்தினால் அவர்களுடைய மனுக்களை நிர்மூலஞ் செய்தார்கள். சில நியாயாதிபதிகள் வியாஜ்ஜியங்களை விசாரிக்கும்படியான சிரமத்தை நீக்கிக்கொள்வதற்காக நான்-ஞாயிண்டர் (non joinder) மிஸ்-ஜாயிண்டர் (mis-joinder) முதலிய பல தோஷங்களைச் சொல்லி வழக்குகளைச் சர்வ சங்காரஞ் செய்துவந்தார்கள். சில நியாயாதிபதிகள் பிரியாது முதலிய தஸ்தாவேஜுகளைப் பார்வையிட்டாலும் ஒவ்வொரு வியாஜ்ஜியத்துக்கும் ஆதாரமான சட்ட சாஸ்-