பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அஞ்சாமல் நியாயம் வழங்குதல்

303

அந்த ராஜ குமாரத்தியைப் போல நாங்களும் அந்நியர்களுடைய தூஷணைகளை யாவது பூஷணைகளை யாவது கவனிக்காமல், எங்களுக்கு நியாயமாகத் தோன்றின காரியங்களை ஊக்க மாகவும் நிர்ப்பய மாகவுஞ் செய்து முடித்தோம்.



41-ஆம் அதிகாரம்
நியாய வாதிகள்

மொட்டைத் தலைச்சிக்குக் கூந்தல் அழகியென்று பெயர் வைத்தது போல, விக்கிரமபுரியில், நியாய சாஸ்திரந் தெரியாதவர்க ளெல்லாம் நியாய வாதிக ளாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களை யெல்லாம் ஞானாம்பாள் வரவழைத்துப் பின்வருமாறு பிரசங்கித்தாள். ““உலகத்தில் நடக்கிற வர்த்தகம், வியாபாரம், பல தொழில்கள், கொள்ளல், விற்றல், பரபத்தியங்கள் தாயபாகங்கள் முதலிய பரஸ்பர, நிபந்தனைகளைப் பற்றி எண்ணிறந்த சட்ட திட்டங்களும், ஒழுங்குகளும் மனு நீதிகளும், நியாயப் பிரமாணங்களும் உண்டா யிருக்கிற படியாலும், அந்த ஒழுங்குகளை யெல்லாம் ஒவ்வொருவனுங் கற்றுக்கொண்டு நியாய சபையில் விவகரிப்பது கஷ்ட சாத்தியம் ஆகையாலும், சட்டந்தெரியாத பாமர ஜனங்களுக்கு உபகார்த்தமாக, நியாயவாதத் தொழில் சகல தேசங்களிலும் ஸ்தாபிக்கப் பட்டிருக்கின்றது. நியாயவாதிகள் துன்பம் அடைந்தவர் களுக்குத் துணைவர்களாயும், ஆஸ்திகளை இழந்தவர்களுக்கு அடைக்கல ஸ்தானமாயும், பாத்தியக் கிரமங்களுக்குப் பாதுகாவலராயு மிருக்கிறார்கள். நியாயவாதிகளே நியாய சாஸ்திரந் தெரியாமலிருப்பார் களானால்