பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

304

பிரதாப முதலியார் சரித்திரம்

அவர்கள் மற்றவர்களுக்கு எப்படிச் சகாயஞ் செய்யக்கூடும்? குருடனுக்குக் குருடன் வழிகாட்டவும், செவிடனுக்கு ஊமையன் உபதேசிக்கவுங் கூடுமா? கூடாதாகையால், நியாயவாதிகள் சகக சாஸ்திரப் பண்டிதர்களா யிருக்கவேண்டும். நியாய ஸ்தலங்களில் சகல விதமான வழக்குகளும் வருகிறபடியால் அந்த வழக்குகளுக்குச் சம்பந்தமான சகல சட்டங்களும் நியாயவாதிகளுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போலப் பாடமா யிருக்கவேண்டும். ஒரு அற்பத் தொழிலாளிகூட, வெகு காலம் பிரயாசைப்பட்டுக் கற்றுக் கொண்டு பிறகு அந்தத் தொழிலில் பிரவேசிக்கிறான். அப்படியானால் வக்கீல் வேலையைக் கற்றுக்கொள்வதற்கு ஒவ்வொருவரும் எவ்வளவு பரிசிரமப்பட வேண்டும்? யுத்த சாஸ்திரந் தெரியாதவன் யுத்தத்திற் பிரவேசித்தது போலவும், மாலுமி சாஸ்திரந் தெரியாதவன் மரக்கலம் ஓட்டப் புகுந்தது போலவும், நியாய சாஸ்திரந் தெரியாத நியாயவாதி எப்போதும் பரம சங்கடப்பட ஹேதுவாகுமாகையால் நியாய வாதிக்குச் சகல சாஸ்திரங்களும் விவகார அனுபவங்களும் தெரிந்திருக்க வேண்டும்.

வக்கீல் ஒரு வழக்கை அங்கீகரித்துக் கொள்வதற்குமுன், அதை நன்றாகப் பரிசோதித்து நியாய வழக்காயிருந்தால் மட்டும் ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, அநியாய வழக்குகளை அங்கீகரிக்கக் கூடாது. வக்கீல் தன்னிடத்தில் வருகிற வழக்காளிகளின் சங்கதிகளைப் பூராயமாய் விசாரித்தால் பெரும்பாலும் உண்மையைக் கண்டுபிடிப்பது பிரயாசையாயிராது. ஒருவன் கொலை செய்திருப்பதாக வக்கீலுக்கு உண்மை தெரிந்த பிற்பாடு, அவன் கொலையே செய்யவில்லை யென்று வக்கீல் பேசுவது தெய்வ சம்மதமாகுமா? அந்த வக்கீலினுடைய மனசாக்ஷிக்குத் தான் பொருத்தமா யிருக்குமா? ஒருவன் திருடனென்று வக்கீலினுடைய மனசுக்குத் தெரிந்திருக்க, அவன் திருடவேயில்லையென்று வக்கீல் சலஞ்சாதிப்பது எவ்வளவு பெரிய அக்கிரமம்? அந்தக்