பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நியாயவாதிகள்‌ கடமை

305

கொலை யையுங் களவையும் வக்கீல் செய்திருந்தால் எவ்வளவு தோஷமோ அவ்வளவு தோஷம் வக்கீலைச் சாராதா? ஒருவன் பொய்ப் பத்திரத்தை உண்டுபண்ணினதாக வக்கீலுக்குப் பரிஷ்காரமாய்த் தெரிந்தபிறகு, அந்தப் பத்திரம் உண்மையென்று வக்கீல் வாதித்தால் அந்தப் பத்திரத்தை சிருஷ்டி செய்தவனுக்கும் வக்கீலுக்கும் என்ன பேதமிருக்கிறது? இந்த வழக்காளியும் மனதறியப் பொய்யாதரவை உண்டுபண்ணினான். வக்கீலும் மனதறியப் பொய்ப்பத்திரத்தை மெய்ப் பத்திரமென்று சாதித்தான். ஆகையால் அவ்விருவருங் குற்ற விஷயத்தில் துல்லியமா யிருக்கிறார்கள். ஒரு வழக்கு நிர்த்தோஷமாகக் காணப்படுகிற பக்ஷத்தில், சில அற்பவிஷயங்களில் இப்படியோ அப்படியோ என்கிற சந்தேகமிருந்தாலுங் கூட அந்த வழக்கை வக்கீல் ஏற்றுக்கொள்ளத் தடையில்லை. ஏனென்றால் உண்மையைக் கண்டுபிடிப்பது கோர்ட்டாருடைய கடமையே யல்லாது வக்கீலுடைய கடமையல்ல. அன்றியும் ஒரு கக்ஷி பொய்யென்று ஸ்தாபிக்கப் படுகிற வரையில் அதை மெய்யென்றே ஊகிக்கவேண்டியது சுபாவமுறைமையா யிருக்கிறது. சில வக்கீல்கள் வழக்கின் தன்மையை யோசிக்காமல், வந்த வழக்கு எந்த வழக்காயிருந்தாலும் உடனே அங்கீகரித்துக் கொண்டு தங்களுடைய மனசாக்ஷிக்கு விரோதமாக கறுப்பை வெள்ளையென்றும், வெள்ளையைக் கறுப்பென்றும் வாதித்துப் பெயரைக் கெடுத்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு அந்நியாயவாதிகள் என்கிற பெயர் பொருந்துமேயல்லாமல் நியாயவாதிகளென்கிற பெயர் பொருந்துமா?

ஒரு வழக்கை வக்கீல் அங்கீகரிக்கும்போது அது துர்வழக்கென்று தெரியாமலிருந்து பிறகு எப்போது தெரிந்தாலும், அதை உடனே நிஷேதித்து விடவேண்டியது வக்கிலின் கடமையா யிருக்கிறது. ஒருவனுடைய கக்ஷியை வக்கீல் பார்வையிட்டு அதை அங்கீகரிக்கமாட்டேனென்று நிராகரித்தபின்பு, அவனுடைய எதிரியின் கக்ஷியையும்

20