பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

306

பிரதாப முதலியார் சரித்திரம்

வக்கீல் ஏற்றுகொள்வது முறையல்ல. ஏனென்றால் எந்தக் கக்ஷிக்காரனுடைய வழக்கை வக்கீல் முந்திப் பார்வையிட்டாரோ அந்தக் கக்ஷிக்காரனுடைய ரகசியங்களும் பலாபலங்களும் வக்கீலுக்குத் தெரிந்திருக்குமாதனாலும், அவைகளை அந்தக் கக்ஷிக்காரனுக்கு விரோதமாகவும் எதிர்க் கக்ஷிக்காரனுக்குச் சாதகமாகவும் உபயோகிக்கும்படியான துர்ப்புத்தி வக்கீலுக்கு உண்டாகுமாதலாலும் வக்கீல் எதிர்க்கக்ஷியை ஏற்றுக்கொள்வது தர்மமல்ல. வக்கீலிடத்தில் வருகிற கக்ஷிக்காரன் அறியாப் புத்தியினால் ஆதாரமற்ற வழக்கைச் செய்ய எத்தனிக்கிறானென்று வக்கீலுக்குத் தெரிந்த மாத்திரத்தில், அவன் வீண் வழக்காடி நஷ்டப்படாதபடி அவனுக்கு வக்கீல் புத்தி போதிக்க வேண்டும். சமாதானப் படுத்த வேண்டியது வக்கீலின் கடமையா யிருக்கிறது. வக்கீல்கள் தங்களுடைய சொந்தப் பிரயோஜனத்துக்காக வழக்குகள் சமாதானமாகாதபடி விக்கினஞ் செய்கிறார்களென்னும் அபவாதத்துக்கு வக்கீல்கள் இடங் கொடுக்கக் கூடாது.

ஒரு துர்நியாயவாதியானவன் கக்ஷிக்காரனைக் கண்ட உடனே “உன்னுடைய அதிர்ஷ்டந்தான் உன்னை என்னிடத்தில் கொண்டுவந்து விட்டது. என்னிடத்தில் எப்போது வந்தாயோ அப்பொதே உன்னுடைய காரியமெல்லாம் அனுகூலந் தான். வல்லவனுக்குப் புல்லுமாயுதம் என்பது போல உன்னுடைய வழக்கு எப்படிப்பட்ட வழக்காயிருந்தாலும் ஜயித்துக் கொடுக்கிறேன். உன்னுடைய எதிரியைத் தலை காட்டாதபடி அடிக்கிறேன். அவன் லா (law) மேலே போனதால் நான் ஈக்விடி (equity) மேலே போவேன். அவன் தர்மசாஸ்திரத்தை ஆதாரமாகக் காட்டினால் நான் இங்கிலீஷ் லாவைக் கொண்டு வெல்கிறேன். அவன் பிரெஞ்சு லாவைப் (french law) பிரயோகித்தால் நான் ஜெர்மன் லாவைப் (german law) பிரயோகிக்கிறேன். அவன் ஜெர்மன்