பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நியாயவாதிகள்‌ கடமை

307

லாவால் என்னை அடித்தால் அவனை ரோமன் லாவால் (Roman law) அடிக்கிறேன்” என்று மெய்யாகவே யுத்தத்துக்குப் புறப்படுகிறவன் போல் வீரச் சல்லாபங் கூறுகிறான். மதில் மேல் ஏறிய பூனையைப் போலவும் சேற்றில் நட்ட கம்பம் போலவும் வியாஜ்ஜியம் எந்தப் பக்கம் தீருமென்பது நிச்சயமில்லாமலிருக்கிற வக்கீல் நம்பிக்கையான வார்த்தைகளைச் சொல்லிக் கக்ஷிக்காரர்களை ஏமாற்றுவது தர்மமா?

வியாஜ்ஜியத் தொகையையும் வக்கீலினுடைய பிரயாசத்தையும் வழக்காளியினுடைய நேர் நிர்வாகத்தையும் யோசித்து, அதற்குத் தக்கபடி கிரமமான பீசு (fees) வக்கீல் வாங்கவேண்டுமே தவிர அதிக பீசு கேட்பது கிரமமல்ல. வியாஜ்ஜியக்காரனுக்குப் பல செலவுகளுந் துன்பங்களும் நேரிடுகிறபடியால் வக்கீலும் அதிக பீசு வாங்கி அவனைத் துன்பப்படுத்துவது நியாயாமல்ல. ஒரு வழக்காளி தோற்கிற பக்ஷத்தில் அவன் கொடுத்த பீசுகளும் செய்த செலவுகளும் அவனுக்கு மறுபடியும் கிடைக்கிறதற்கு மார்க்கமில்லாமல் நஷ்டமடைகிறான். அவன் ஜெயிக்கிற பக்ஷத்தில் சட்டத்திற் குறிக்கப்பட்ட கிரமமான பீசு மட்டும் அவனுக்கு எதிரியினால் கிடைக்குமே யல்லாமல் அவன் அதிகமாகக் கொடுத்த பீசு அவனுக்குக் கிடைக்க வழியில்லை. ஆகையால் இந்த விஷயங்களையெல்லாம் வக்கீல்கள் யோசித்துப் பீசு வாங்குகிற விஷயத்தில் அதிக்கிரமிக்கக் கூடாது. துன்பப் படுகிறவர்களுக்குச் சகாயஞ் செய்ய வேண்டியது எல்லாருடைய கடமையா யிருப்பதைப் போலவே வக்கீல்களுக்கும் முக்கிய கடமையாயிருக்கிறது. சொத்து நஷ்டமாவது அல்லது சரீரத் துன்பமாவது அடைந்து, பீசு கொடுக்க நிர்வாகமில்லாத பரம ஏழைகளிடத்தில் வக்கீல்கள் ஒன்றும் வாங்காமல் அவர்களுடைய கக்ஷியில் பேசிச் சாதிப்பார்களானால், அவர்களுக்குப் பரம சுகிர்தமும் கீர்த்தியுமாயிருக்கும். மற்றவர்கள் பொருள் கொடுத்துச் சம்பாதிக்கிற