பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

312

பிரதாப முதலியார் சரித்திரம்

தென்று வக்கீல் ஆக்ஷேபிக்க என்ன தடையிருக்கிறது? வேறொரு வழக்கில் தகப்பன் பிள்ளைகளுடைய ஹிதத்தை நாடியே குடும்ப உபயோகர்த்தமாக சத்விநியோகஞ் செய்திருந்தால் அந்த விநியோகம் செல்லுமென்று வக்கீல் வாதிக்கவும் பிரதி பந்தமில்லை. ஒரு வழக்கில் புருஷன் பர ஸ்திரீயைச் சேர்த்துக் கொண்டு தன் பத்தினியை நிஷ்காரணமாய் அடித்துத் துரத்தி அநியாயஞ் செய்திருப்பானானால், அவன் பெண்சாதிக்குப் பிரத்தியேக ஜீவனாம்சம் கொடுக்க வேண்டுமென்று வக்கீல் வாதிக்கலாம். வேறொரு வழக்கில் பெண்சாதி யாதொரு காரணமு மில்லாமல் ஸ்வேச்சையாய்ப் புருஷனை விட்டு விலகிப் போயிருப்பாளானால் அவள் பிரத்தியேக ஜீவனாம்சத்துக்கு அபார்த்தியஸ்தி யென்று வக்கீல் பேச என்ன விக்கின மிருக்கின்றது? இப்படிப்பட்ட விஷய பேதமான வழக்குகளில் வக்கீல் வெவ்வேறு விதமாக வாதிக்கலாமே யல்லாது ஒரே தன்மையான வழக்குகளில் வித்தியாசமாகப் பேசுவது விபரீத மல்லவா? நியாயவாதிகள் நியாயாதிபதிகளுக்கு அடுத்த படியி லிருப்பதாலும், ஒரு கால் அவர்கள் நியாயாசனத்தில் ஏறவும் கூடுமாகையாலும், நியாயவாதிகள் நீதிமான்களாயும் சர்வ குணோத்தமர்களாயும் பிரகாசிக்க வேண்டும்”“ என்றாள்.




42-ஆம் அதிகாரம்
சுதேச பாஷாபிவிர்த்தி—தமிழின் அருமை

முந்தின அதிகாரத்தில் கூறியபடி ஞானாம்பாள் வக்கீல்களுக்கு நியாயபோதஞ் செய்தபிறகு மறுபடியும் அவர்களைப் பார்த்துச் சொல்லுகிறாள்:- “இங்கிலீஷ் அரசாட்சியில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிற தமிழ்க் கோர்ட்டுகளில், சில தமிழ் நியாயவாதிகள் தமிழில் வாதிக்காமல் இங்கிலீஷில்