பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

320

பிரதாப முதலியார் சரித்திரம்

தர்க்கம் முதலிய பல பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவைப் படிப்பதற்கு ஒரு புருஷ ஆயுஷு போதாதென்று, அந்த பாஷைகளை உணர்ந்தவர்கள் சொல்லுகிறார்கள். சம்பாஷணைக்கும் உலக வியாபாரங்களுக்கும் உபயோகமில்லாத அந்த பாஷைகளை அவ்வளவு பிரயாசைப்பட்டுப் படித்தும் பிரயோஜனமென்ன? ஆனால் சமஸ்கிருதமும், லத்தீனும் அதிக சிறப்பும் அழகும் அலங்காரமும் பொருந்திய பாஷைகளென்பதற்குச் சந்தேகமில்லை. அவகாசமுள்ளவர்கள் சொந்த பாஷையோடு அந்த பாஷைகளையும் படிப்பது அதிக விசேஷந்தான்; ஆனால் சொந்த பாஷைகளை நன்றாகப் படிக்காமல் அந்நிய பாஷைகளிலே காலமெல்லாம் போக்குவது அகாரியமென்று தான் நாம் ஆக்ஷேபிக்கிறோம்.

இங்கிலீஷ், பிரென்ச் முதலிய ராஜ பாஷைகளைப் படிப்பிக்க வேண்டாமென்று நாம் விலக்கவில்லை. ஏனென்றால் நாம் நடக்கவேண்டிய சட்டங்களும், ஒழுங்குகளும், நியாயப் பிரமாணங்களும் ராஜ பாஷைகளிலே இருக்கிற படியால் அந்தப் பாஷைகள் நமக்குத் தெரியாவிட்டால் அந்த ராஜாங்கத்தில் நாம் எப்படி நிர்வகிக்கக் கூடும்? அன்றியும் சன்மார்க்கங்களைப் பற்றியும் உலகத்துக்கு மிகவும் உபயோகமான பல விஷயங்களைப் பற்றியும் அந்த ராஜ பாஷைகளில் அநேக அருமையான கிரந்தங்கள் இருக்கிற படியால் அவைகளைப் படிக்கப் படிக்க அறிவு விசாலிக்குமென்பது திண்ணமே! ஆனால் மாதா வயிறெரிய மகேஸ்வர பூஜை செய்வதுபோல், சொந்த பாஷைகளைச் சுத்தமாக விட்டு விட்டு ராஜ பாஷைளை மட்டும் படிப்பது அநுசிதமல்லவா? அநேகர் தங்கள் சுய பாஷைகளில் தங்களுடைய கையெழுத்துக்களைக் கூட பிழையில்லாமல் எழுத அசக்தர்களாயிருக்கிறார்கள். சிலர் தமிழ் பாஷை தெரியாமலிருப்பது தங்களுக்குக் கௌரவமாகவும் அந்தப் பாஷையை அறிந்திருப்பது தங்களுக்கு அகௌரவமாகவும் எண்ணுகிறார்கள். சுய பாஷா ஞானம் தங்களுக்கு