பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

322

பிரதாப முதலியார் சரித்திரம்

இங்கிலீஷ், பிரென்ச் முதலிய பாஷைகளைப் போலத் தமிழில் வசன காவியங்கள் இல்லாமலிருப்பது பெருங்குறை யென்பதை நாம் ஒப்புக் கொள்கிறோம். அந்தக் குறையைப் பரிகரிப்பதற்காகத் தான் எல்லாரும் ராஜ பாஷைகளும் தமிழும் கலந்து படிக்க வேண்டுமென்று விரும்புகிறோம். ராஜ பாஷகளும் சுதேச பாஷைகளும் நன்றாக உணர்ந்தவர்கள் மட்டும் உத்தமமான வசனக் காவியங்களை எழுதக் கூடுமேயல்லாது இதரர்கள் எழுதக் கூடுமா? வசனக் காவியங்களால் ஜனங்கள் திருந்தவேண்டுமே யல்லாது, செய்யுட்களைப் படித்துத் திருந்துவது அசாத்தியமல்லவா? ஐரோப்பிய பாஷைகளில் வசன காவியங்கள் இல்லாமலிருக்குமானால் அந்தத் தேசங்கள் நாகரிகமும் நற்பாங்கும் அடைந்திருக்கக் கூடுமா? அப்படியே நம்முடைய சுய பாஷைகளில் வசன காவியங்கள் இல்லாமல் இருக்கிறவரையில் இந்தத் தேசம் சரியான சீர்திருத்தம் அடையாதென்பது நிச்சயம். சுதேச பாஷைகளைப் படிக்காமல் ராஜ பாஷைகளை மட்டும் படிக்கிறவர்கள் மற்ற ஜனங்களைக் கலவாமல் தாங்கள் ஒரு அந்நிய தேசத்தார் போல் ஜீவிக்கிறார்கள். ராஜ பாஷைகள் தெரியாத தங்களுடைய மாதா பிதாக்கள் மனைவி மைந்தர் முதலியோர்களிடத்தில் பேசுவது கூட அவர்களுக்கு அருவறுப்பா யிருக்கிறது. தாங்களும் சுய பாஷைகளை நன்றாகப் படிக்காமலும் மற்றவர்களுக்குப் போதிக்காமலும் இருப்பது அவர்களுடைய பிசகே யல்லாமல் அவர்களுடைய பந்து ஜனங்களின் பிசகல்லவே! ராஜ பாஷையைப் படித்துக் கல்வியின் அருமை அறிந்தவர்களே சுய பாஷைகளைக் கவனிக்காமலிருப்பார்களானால் இதர ஜனங்கள் எப்படி கவனிக்கக் கூடும்? ஸ்திரீகளும் மற்ற ஜனங்களும் சுய பாஷைகளைப் படித்துத் திருத்தவேண்டுமே யல்லாது அவர்கள் எல்லாரும் ராஜ பாஷைகளைக் கற்றுணர்வது சாத்தியமான காரியமா? சுய பாஷையைக் கல்லாமல் ராஜ பாஷையை மட்டும் படிக்கிறவர்கள் தாங்கள் மட்டும் பிழைக்க அறி-