பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்வியறிவற்ற செல்வர்கள்‌

323

வார்களேயன்றி மற்றவர்களுக்கு அவர்களால் என்ன சாதகம்? சுய பாஷையைப் படிக்காதவர்கள் தாங்கள் கெடுவது மன்றி ஐரோப்பியர்களையும் கெடுக்கிறார்கள். முன் வந்த ஐரோபியர்கள் இத் தேச பாஷைகளை எவ்வளவோ கவனமாகப் படித்தார்கள். இப்பொது சுதேசிகளே சுய பாஷைகளைக் கைவிட்டபடியால் ஐரோபியர்களும் அந்த பாஷைகளை அபதார்த்தமாக எண்ணுகிறார்கள். இவ்வாறு நம்முடைய பாஷைகளை அந்நியர் அவமதிக்கும்படி செய்வது அயுக்தம் அல்லவா?

இந்த தேசத்துப் பெரிய பிரபுக்கள், தனவான்கள், மிராசுதாரர்கள், ஜமீன்தார்கள், பாரிவர்த்தகர்கள் முதலானவர்களுடைய அறியாமையை நினைக்கும்போது நமக்குப் பிரலாபமும், பெருமூச்சும் உண்டாகின்றன. அவர்களில் அநேகர் சுத்த நிரக்ஷரகுக்ஷிகளாயிருக்கிறார்கள். சிலர் தங்களுடைய கையெழுத்துக்களை மட்டும் எழுதக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். “சுப்பிரமணியன்” என்பதற்குச் “சுக்கிரமணியன்” என்றும் “சிதம்பரம்” என்பதற்குச் “செலம்பரம்” என்றும், “துரைசாமி” என்பதற்கு “தொரைசாமி” என்றும், “பொன்னம்பலம்” என்பதற்கு “பொண்ணம்பலம்” என்றும், “வைத்தியலிங்கம்” என்பதற்கு “வைத்திலிங்கம்” என்றும் கையெழுத்து வைக்கிறார்கள். இந்த வித்வ சிரோமணிகளே, ஜூரிகளாகவும் முனிசிபல் கமிஷனர்களாகவும் லோகல் பண்டு மெம்பர்களாகவும், பென்ச்மேஜிஸ்திரேட்டுகளாகவும் தேவாலய தர்மாலய விசாரணைக் கர்த்தாக்களாகவும் (Trustees of temples and charitable institutions) நியமிக்கப்படுகிறார்கள். அவர்களுடைய அதிகார ஸ்தானங்களுக்குப் போகும்போது, பிரதிமைகளைப் போல் நாற்காலிகளில் வீற்றிருக்கிறார்களே யல்லாது, அவர்களுடைய வேலை இன்னதென்பதைப் பரிச்சேதம் அறியார்கள். பிரதிமைகளுக்கும் இவர்களுக்கும் பேதம் என்னவென்றால், பிரதிமைகள் அசையாம-