பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

324

பிரதாப முதலியார் சரித்திரம்

லிருக்கின்றன, இவர்கள் நாற்காலிகளில் தூங்கி விழுந்து அசைந்துகொண்டிருக்கிறார்கள். தேச காவியங்களில் தகுந்த வசன காவியங்கள் இருக்குமானால் இவ்வளவு நிர்ப்பாக்கியமான ஸ்திதியிலிருப்பார்களா? ஆதலால் இங்கிலீஷ், பிரென்ச் முதலிய ராஜபாஷைகளைப் படிக்கிறவர்கள், தேச பாஷைகளையுந் தீர்க்கமாக உணர்ந்து இந்த தேசத்தைச் சூழ்ந்திருக்கிற அறியாமை யென்னும் அந்தகாரம் நீங்கும்படி வசன காவியங்களென்னும் ஞான தீபங்களை ஏற்றுவார்களென்று நம்புகிறோம். தமிழ் படிக்காதவர்கள் தமிழ் நாட்டில் வசிக்க யோக்கியர்கள் அல்ல. அவர்கள் எந்த ஊர் பாஷையைப் படிக்கிறார்களோ, அந்த ஊரே அவர்களுக்குத் தகுந்த இடமாகையால் சுய பாஷையைப் படிக்காமல் இங்கிலீஷ் மட்டும் படிக்கிறவர்களை இங்கிலீஷ் தேசத்துக்கு அனுப்பி விடுவோம். பிரென்ச் மட்டும் படிக்கிறவர்களைப் பாரிஸ் பட்டணத்துக்கு அனுப்புவோம். லத்தீனுக்குஞ் சம்ஸ்கிருதத்துக்குஞ் சொந்த ஊர் இல்லாதபடியால் அந்த பாஷைகளைப் படிக்கிறவர்களை நாம் அநாமகரணத் தீவுக்கு அனுப்புவோம்” என்றாள்.



43-ஆம் அதிகாரம்
உத்தியோக மமதை—கர்விகளுக்கு நற்புத்தி

விக்கிரமபுரியில் முந்தின ராஜாவால் நியமிக்கப்பட்ட ஒரு அதிகாரி, கர்விஷ்டனாயும் பரம துஷ்டனாயும் இருந்தான். “அற்பனுக்கு ஐசுவரியம் வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்” என்கிற பழமொழிப்படி அவனுக்கு அதிகாரம் கிடைத்தவுடனே தன்னுடைய பூர்வ ஸ்திதியைச் சுத்தமாய் மறந்து தன்னை ஒரு அவதாரப் புருஷன் போல் எண்ணிக் கொண்டான். வித்தை-