பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

XXXv

கத்தை” அச்சிட, சென்னை செல்லவிருப்பதை அறிந்த நம் நாயகர், சென்னை செல்லும் வழியில், மாயூரத்தில் தன்னைக் கண்டு, தன்னுடன் சில நாட்கள் தங்க வேண்டும் என்று கோரி அவருக்குக் கடிதம் எழுதினார். வேதநாயகரைப் பற்றிக் கேள்வியுற்றிருந்த கிருட்டினப் பிள்ளையும் அவ்வேண்டுகோளுக்கு இசைந்து மாயூரம் வந்தார். அவரைத் தன் இல்லத்தில் தங்கச் செய்து இனிதாக விருந்தோம்பியதோடு அமையாமல், மாயூரத்திலிருந்த மகாவித்துவான் உள்ளிட்ட தமிழறிஞர் அனைவரையும் ஓர் அவையாகக் கூட்டி அவர்கட்ருக் கிறிஸ்தவக் கம்பரை அறிமுகம் செய்துவைத்து அவர் பாடல்களை அவர் பாடிக் காட்டி விளக்கம் செய்ய வாய்ப்பளித்தார். கிறிதைவக் கம்பரின் கவித்தேனை மாந்திக் களித்தார், மகாவித்துவான் முதலியவர்களுடன் சேர்ந்து கிருட்டினப் பிள்ளைக்குப் புகழாரம் சூட்டினார். இந்நிகழ்ச்சிக்கு முன் ஒருவரை யொருவர் நேரில் பார்த்தறியாத இவ்விருவரும், அதுமுதல் உணர்ச்சி யொத்த நண்பராயினர்.

மாயூரத்தை அடுத்திருந்த திருவாவடுதுறை மடத்துத் தலைவராகிய சுப்பிரமணிய தேசிகர், நந்தனார் சரித்திரக் கீர்த்தனை பாடிய முடிகொண்டான் கோபாலகிருட்டின

பாரதியார், புதுக்கோட்டை மாவட்டத் தலைமை நீதிபதியாயிருந்த, யாழ்ப்பாணம், சி. வை. தாமோதரம் பிள்ளை. புதுவை வித்துவான் சவரிராயலு நாயகர் முதலாக, நம் நாயகரோடு நட்பு பாராட்டி, அவரோடு நேரிலும், கடிதங்கள் மூலமாகவும் தொடர்புகொண்ட நல்லறிஞர், பட்டியல் மிகவும் நீளும். அவர்களெல்லாம் நம் நாயகரைப் பற்றியும், அவர் நூல்களைப் பற்றியும், அவர் தொண்டுகளைப் பற்றியும் பாராட்டி உரைத்த உரைகளும், பாடிய பாடல்களும் ஒரு தனி நூலாகும் தகுதியுடையவை.