பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நல்ல குலமும்‌, கெட்ட இரத்தமும்‌

329

ஜாதிபேதங்களும் அந்தஸ்துக்களும் மனுஷர்களுடைய கட்டுப்பாடு என்பதை நீர் அறியாமற்போனது பெரிய ஆச்சரியம் அல்லவா?

நல்ல மரத்திலே புல்லுருவி பாய்ந்தது போல், ஒரு நற்குணமுடைய அரசனுக்குத் துர்க்குணமுள்ள புத்திரன் ஒருவன் இருந்தான். அவன் தன்னை மிகவும் உயர்வாக எண்ணி மற்றவர்களைத் தாழ்வாக நடத்தி வந்தான். அவனைத் திருத்துவதற்காக ராஜா எவ்வளவு பிரயாசைப் பட்டும் அவன் திருந்தவில்லை. அந்த ராஜகுமாரனுக்கு விவாகமாகி ஒரு குழந்தை பிறந்தது. அந்தப் பிள்ளைக்கும் அப்போது பிறந்த வேறொரு ஏழைப் பிள்ளைக்கும் ஒரே மாதிரியாக உடை உடுத்தி இரண்டு பிள்ளைகளையும் ஒரே இடத்தில் வைத்திருக்கும்படி, ராஜா திட்டஞ் செய்திருந்தார். அந்த ராஜகுமாரன் தன் பிள்ளையைப் பார்க்கிறதற்காக ஓடின போது இரண்டு பிள்ளைகளைக் கண்டு தன் பிள்ளை இன்னதென்று தெரியாமல் வேலைக்காரர்களைக் கோபித்துக் கொண்டான். அந்த சமயத்தில் ராஜா வந்து தன் புத்திரனைப் பார்த்து “மகனே! மேன்மையான அந்தஸ்தும் உயர்ந்த ரத்தமும் உள்ள உன் பிள்ளையை நீ கண்டு கொள்ளக் கூடாதா? ஏன் மயங்குகிறாய்?” என்றார். ராஜகுமாரனுக்கு நாணமுண்டாகி தலை கவிழ்ந்து கொண்டு அதோ முகமாக நின்றான். உடனே அந்தப் பிள்ளைகளில் ஒரு பிள்ளையைத் தொட்டுக்காட்டி ““இது தான் உன் பிள்ளை. இந்தப் பிள்ளையின் காலில் ஒரு நாடாவைக் கட்டி வைத்திருந்தேன். அப்படிச் செய்யாவிட்டால் உன் பிள்ளை இன்னதென்று தெரியாது. பிறக்கும்போது எல்லோரும் சமானமென்றும் உயர்குலமும் மேம்பாடும் சுத்தக் கற்பிதமென்றும் அறிந்துகொள்”” என்றார்.

அந்த ராஜகுமாரனும் ஒரு வேலைக்காரனும் வியாதியா யிருந்த போது, வைத்தியர் வந்து பார்வை-