பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

332

பிரதாப முதலியார் சரித்திரம்

தீவே தனக்கு மயானப் பூமியாக இருக்குமென்று தெரிந்து கொண்டான். சில நாளைக்குப் பிறகு ராஜா அந்த இருவரையுங் கொண்டுவரும்படி உத்தரவு செய்தார். ராஜா முன்பாக அந்தப் பிரபு தன்னுடைய அறியாமையையும் எளியவன் தனக்குச் செய்த உபகாரங்களையும் ஒப்புக்கொண்டு தன்னுடைய ஆஸ்திகளிற் பாதியை அந்த ஏழைக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். ராஜா அந்தப் பிரபுவைப் பார்த்டுச் சொல்லுகிறார்:- “அந்த ஏழை இல்லாவிட்டடால் அந்தக் கானகத்தை விட்டு நீ வானகத்துக்குப் போயிருப்பாயென்பது நிச்சயம். அப்படியே சகல தேசங்களில் இருக்கிற பிரபுக்களும் ஏழைகளால் ஜீவிக்கிறார்களே யல்லாமல் மற்றப்படியல்ல. எண்ணிக்கையில்லாத ஏழைகளுடைய தேகப் பிரயாசத்தினால் நமக்குச் சகல பாக்கியங்களுங் கிடைக்கிற படியால் அவர்களை நாம் பெரிய உபகாரிகளாக மதிக்க வேண்டும் என்றார்.

ஒரு பிரபு தனக்குப் பிள்ளை பிறந்த உடனே பால் கொடுப்பதற்காக அந்தப் பிள்ளையைப் பாற்காரி கையில் ஒப்புவித்தார். அந்தப்பிள்ளையும் பாற்காரி பிள்ளையும் சமான வயதாகவும் அபேதமாகவும் இருந்தபடியால் அந்தப் பாற்காரி தன் பிள்ளையைப் பிரபு பிள்ளையாகவும் பிரபுவின் பிள்ளையைத் தன் பிள்ளையாகவும் மாற்றி விட்டாள். இந்தப் பிரகாரம் பாற்காரிப் பிள்ளை பிரபுவாகவும், பிரபு வீட்டுப் பிள்ளை ஏழையாகவும் மாறிப்போய் விட்டார்கள். சில பிரபுக்கள் அகம்பாவத்தினால் அந்நியரிடத்தில் வாயைக் கொடுத்து அவமானப்பட்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சில திருஷ்டாந்தங்களைத் தெரிவிக்கிறேன்.

ஒரு அரசன் சில அந்நிய தேசத்து வர்த்தகர்களிடத்தில் சில குதிரைகளை விலைக்கு வாங்கிக்கொண்டு, பின்னும் இரண்டு லக்ஷ ரூபாய் அவர்கள் கையில் அதிகமாகக் கொடுத்து அந்தப் பணத்துக்குள்ள குதிரைகளைக்