பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாய்‌ காவாமையால்‌ மானம்‌ இழந்தவர்கள்‌

333

கொண்டு வரும்படி சொன்னான். அந்த வியபாரிகள் பணத்தை வாங்கிக் கொண்டுபோய்விட்டார்கள். பிறகு ஒரு நாள் அந்த ராஜா தன் மந்திரியை அழைத்து தன் தேசத்தில் உள்ள மூடர்களுடைய பெயுர்களையெல்லாம் எழுதிக் கொண்டு வரும்படி ஆக்ஞாபித்தான். மந்திரி ராஜாவைப் பார்த்து “நான் முன்னமே அந்தப்படி ஒரு அட்டவணை எழுதி வைத்திருக்கிறேன். அதில் எல்லாருக்கும் முந்தி உங்களுடைய பெயரை எழுதியிருக்கிறேன். ஏனென்றால் அந்த வர்த்தகர்கள் இன்ன ஊரென்று தெரிந்துகொள்ளாமலும் அவர்களிடத்தில் ஜாமீன் வாங்காமலும் இரண்டு லக்ஷ ரூபாய் அவர்கள் கையில் நீங்கள் கொடுத்துவிட்டதால் மூடருடைய ஜாப்தாவில் முதன்மையாக உங்களுடைய பெயரை எழுதியிருக்கிறேன்” என்றான். அரசன் மந்திரியைப் பார்த்து “ அவர்கள் குதிரைகளைக் கொண்டு வந்தால் அப்போது என்ன செய்வாய்?” என்றான். “அவர்கள் குதிரைகளைக் கொண்டு வந்தால் உங்கள் பெயரைக் கிறுக்கிவிட்டு அவர்கள் பெயரைப் பதித்துக்கொள்ளுவேன்” என்று மந்திரி பிரதி உத்திரஞ் சொன்னான்.

ஒருவனுக்குப் பெரிய உத்தியோகங் கிடைத்தபடியால் அவனுடைய சிநேகிதன் அவனுக்கு மங்கள வார்த்தை சொல்வதற்காக வந்தான். அவன் தன்னுடைய உத்தியோக மமதையால் சினேகிதனைப் பார்த்து “நீ யார்?” என்று வினாவினான். சினேகிதனுக்கு கோபம் ஜனித்து “நான் உன்னுடைய பழைய நேசன். உனக்கு இரண்டு கண்ணும் அவிந்து போனதாக கேள்விப்பட்டு துக்கங் கொண்டாட உன்னிடத்துக்கு வந்தேன்” என்றான்.

ஒரு நியாயாதிபதி ஒரு சாக்ஷிக்காரனைப் பார்த்து “ “நீ திருடனென்று கண்ணாடிபோல உன் முகங் காட்டுகிறது”” என்றான். உடனே சாக்ஷிக்காரன் அந்தக் கெட்ட நியாதிபதியைப் பார்த்து “ “என்னுடைய,