பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாய்‌ காவாமையால்‌ மனம்‌ இழந்தவர்கள்‌

335

ஒரு அரசன் பொழுது விடியுமுன் எழுந்து வேட்டையாடுவதற்காக காட்டுக்குப் போனான். காட்டில் மத்தியானம் வரைக்குஞ் சுற்றித்திரிந்தும் வேட்டை அகப்படவில்லை. அன்றையதினம் விடியற்காலத்தில் அரசன் ஒரு குடியானவன் முகத்தில் விழித்தபடியால் அது நிமித்தந் தனக்கு வேட்டை அகப்படவில்லையென்று நினைத்து, அந்தக் குடியானவனைக் கொன்றுவிடும்படி உத்திரவு செய்தான். அந்தக் குடியானவன் அரசனைப் பார்த்து, “””மகாராஜாவே! பிராதக்காலத்தில் நீங்கள் என் முகத்தில் விழித்தேன். என் முகத்தில் நீங்கள் விழித்ததற்கு உங்களுக்கு வேட்டை அகப்படவில்லை. உங்கள் முகத்தில் நான் விழித்ததற்கு என்னுடைய பிராணனை இழந்து போகும் படி சம்பவித் திருக்கிறது””” என்றான். இதைக் கேட்டவுடனே அரசனுக்கு விவேகம் உண்டாகி “””குடியானவனைக் கொல்லவேண்டம்””” என்று உத்திரவு செய்தான்.

ஒரு வக்கீல் ஒரு நியாய சபையில், ஒரு நியாய வாதம் செய்து கொண்டிருக்கும் போது, நியாயாதிபதி, ““கழுதை கத்துகிறது கழுதை கத்துகிறது”” என்று வாய்க்குள்ளே முணுமுணுத்துக் கொண்டிருந்தார். அதை வக்கீல் கேட்டுங் கேளாதவர் போலத் தன் கக்ஷியைப் பேசினார். பிறகு நியாயாதிபாதி தீர்மானம் சொல்லிக் கொண்டிருக்கும்போது ஒரு யதார்த்தமான கழுதை தெருவிலே கத்தத் துவங்கிற்று. உடனே நியாதிபதி தீர்மானம் சொல்வதை நிறுத்தி, ””“அது என்ன சப்தம்?”” என்றார். அந்த வக்கீல் எழுந்து, ””அது கோர்ட்டா ருடைய எதிரொலி தான், வேறொன்றும் அல்ல””” என்றார். நியாதிபதி அதோமுகம் ஆனார்.

ஒருவனை ஒருவன் அடித்த சங்கதியைப் பற்றி நியாய சபையில் விசாரணை நடந்தபோது பிரியாதுக்காரனைக் குற்றவாளி அடித்ததைத் தான் பார்த்ததாக ஒரு சாக்க்