பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

336

பிரதாப முதலியார் சரித்திரம்

காரன் சொன்னான். குற்றவாளியின் வக்கீல் அந்தச் சாக்ஷிக்காரனைப் பார்த்து ““அந்த அடி எப்படிப்பட்ட அடி?”” என்று கேட்டார். கையை ஓங்கிப் பலமாக அடித்தாகச் சாக்ஷிக்காரன் சொன்னான். வக்கீல் அவனைப் பார்த்து “”அது இப்படிப்பட்ட அடியென்று எனக்கு நீ மெய்ப்பிக்க வேண்டும்”” என்றான். சாக்ஷிக்காரன் கோர்ட்டாரைப் பார்த்து “”அது இப்படிப்பட்ட அடியென்று நான் எப்படி மெய்ப்பிப்பேன்? அது பலமான அடிதான்”” என்றான். நியாயாதிபதி சாக்ஷிக்காரனைப் பார்த்து “”வக்கீல் சொல்லுகிறபடி அவருக்கு நீ மெய்ப்பிக்கத்தான் வேண்டும்”” என்றான். உடனே சாக்ஷிக்காரன் இரண்டு கைகைளையும் ஓங்கி தன் பலமெல்லாம் கூட்டி வக்கீலை அடித்து “”இவ் வகையாகத்தான் குற்றவாளி அடித்தான்,”” என்றான். வக்கீல் அந்த அடி பொறுக்கமாட்டாமல் கீழே விழுந்துவிட்டார். இது வக்கீலினுடைய ஸ்வயங்கிருத அபராதமானதால் சாக்ஷிக்காரனை ஒன்றுஞ் செய்யக்கூடாமற் போய்விட்டது” என்றேன்.



44-ஆம் அதிகாரம்
ஆண்பால் பெண்பால் மயக்கம்—
பெண்ணைப் பெண் விரும்பல்—
இராஜாங்க பாரம்பரைப் பாத்திரம்

விக்கிரமபுரி குடியரசாவதற்கு முந்தி, அதை ஆண்டுவந்த அரசனுக்குப் புருக்ஷப்பிரஜை யில்லை யென்பதை முன்னமே தெரிவித்திருக்கிறேன். அவருக்கு அதிரூப செளந்தரியமான ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தது. அந்தப் பெண் பெயர் ஆநந்த வல்லி அந்தக் குழந்தை அதிபால்லியமாயிருக்கும் போது, தாயும் தகப்பனும்இறந்து