பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விக்கிரமபுரி அரசன்‌ புதல்வி

337

போய் விட்டதால், பாட்டியாருடைய கையிலே வளர்ந்தது. ஞானாம்பாளுக்குப் பட்டாபிஷேகமான பிறகு, அந்தக் குழந்தையைத் தன் குழந்தைபோற் பாவித்து, மிகுந்த அன்போடுங் கரிசனத்தோடும் ஆதரித்துவந்தாள். தகுந்த உபாத்தியாயர்களைக் கொண்டு வித்தியாப்பியாசஞ் செய்வித்தது மின்றி, தன்னாற் கூடிய போதும், அந்தப் பெண்ணுக்குச் சன்மார்க்கங்களையும், ராஜ நீதிகைளையும் ஞானாம்பாள் போதித்து வந்தாள். அந்தப் பெண்ணுக்குப் பக்குவகாலஞ் சமீபித்த உடனே, அவளுக்கும் எங்களுக்கும் முக தரிசன மில்லாமல் அந்தப்புர வாசமா யிருந்தாள். அவளுடைய அந்தஸ்துக் குரிய காரியங்களில் ஒரு குறைவுமில்லாமல், சகல மேம்பாடுகளும் உபசார மரியாதைகளும் நடந்து வந்தன.

ஞானாம்பாள் ஆண்வேடம் பூண்டுகொண்டு அரசு செய்வது தனக்கு அரிகண்டமா யிருப்பதால், தான் பெண்பால் என்பதை ஜனங்களுக்குத் தெரிவிக்க வேண்டுமென்று அனேக ஆவர்த்தி அபேக்ஷித்தாள். நான் கூடாதென்று தடுத்தபடியால் என் பிரியத்துக்காக அவன் ஆண் வேஷத்துடன் அரசு செய்து வந்தாள். ஆனால் ராஜ்ஜியபாரத்தைச் சேர்ந்து பல கவலைகளினாலும் தன்னுடைய உற்றார் பெற்றாரைப் பிரிந்திருக்கிற ஏக்கத்தினாலும் ஞானாம்பாள் சிலநாளாய்ச் சந்தோஷமாயிராமல் தேகம் மெலிந்து போனாள். அவள் ஒருநாள் என்னை நோக்கி நெட்டுயிர்ப்புடன் சொல்லுகிறாள்:- “எப்படிப்பட்ட முழுமூட்சுக்களாயிருந்தாலும் பிரபஞ்ச மாயாவிகாரத்தில் மதிமயங்காதிருப்பது அதிதுர்லபமென்று பெரியோர்கள் சொல்லுகிறார்கள். நமக்குப் பிரபஞ்ச மாயையுடனே கூட ராஜயோகம் வந்துவிட்டதால் நாம் சித்தம் பேதித்து நம்முடைய உற்றார் பெற்றார்களையெல்லாம் மறந்துவிட்டோம். நாம் அவர்களை மறந்து விட்டது போல் அவர்கள் நம்மை ஒரு நிமிஷமாவது மறந்திருப்பார்களா? நாம் ஆதியூரை விட்டுத் தப்பிப் போன சமாசாரம் கேள்விப்பட்ட உடனே,

22