பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விக்கிரம்புரியை விட்டு வெளியேறச் சூழ்ச்சி

349

கள்”” என்றார்கள்.இதைக் கேட்டவுடனே நாங்கள் பிரமித்துச் சிறிது நேரம் சிலை போல அசையாமல் உட்கார்ந்திருந்தோம். அந்தச் சமயத்தில் மந்திரிகள் வந்து நுழைந்தார்கள். ஞானாம்பாள் அவர்களைப் பார்த்து “முரசு அறையும்படி யார் உத்தரவு கொடுத்தார்கள்?” என்று வினவினாள். மந்திரிகள் “மகாராஜாவே! இன்று காலையில் நீங்கள் சொன்ன அபிப்பிராயத்துக்கு விரோதமாக ஒன்றும் நடக்கவில்லை. பட்டாபிஷேகமுங் கலியாணமும் ஒரே தினத்தில் நடக்கவேண்டுமென்பது எல்லாருடைய பிரார்த்தனையாகவும் இருக்கிறது. இந்த விஷயத்தில் எல்லாரும் ஒரு மனமாயும் ஒரே குமுக்கமாயுமிருக்கிறார்கள். அவர்களுடைய கருத்துக்கு விரோதஞ் செய்தால் பெருங் கலகத்துக்கு இடமாகுமென்று தோன்றுகிறது. மேலும் அந்தக் குமாரத்தி தனக்குப் பட்டாபிஷேகஞ் செய்துவிட்டு நீங்கள் போய்விடுவீர்களென்று நினைத்து தனக்குப் பட்டாபிஷேகமே வேண்டாமென்று அழுதது. நீங்கள் தன்னைக் கலியாணஞ் செய்துகொள்வீர்களென்று கேள்விப்பட்ட பிறகு தான் அது சந்தோஷமாயிருக்கிறது. உங்களுடைய முயற்சியினாலே தனக்குப் பட்டாபிஷேகம் ஆகிறதென்று தெரிந்து கொண்டு முன்னையைப் பார்க்கிலும் நுறு பங்கு அதிகமாக உங்களிடத்திற் பக்ஷமும் பாசமுமாயிருக்கிறது. ஆகையால் அந்தப் பெண்ணினுடைய ஆசையைக் கெடுக்க வேண்டாம், மகாராஜாவே!” என்று சொல்லி நாங்கள் மறுமொழி சொல்வதற்கு இடமில்லாமல் திடீரென்று சடுதியிற் போய்விட்டார்கள். இந்தச் சமாச்சாரங்களைக் கேட்டபின்பு, முன்னே எனக்கிருந்த தைரியம் நீங்கி என்பாடுந் தடுமாற்றத்தில் வந்துவிட்டது. ““ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்“” என்பது போல, நாங்கள் அந்த ஊரில் இருந்தால் ஞானாம்பாள் அந்தப் பெண்ணுக்கு அகத்தியம் தாலி கட்ட வேண்டியதாயிருக்கிறது. மாட்டே னென்றால், ஊராருடைய பகையையும், அந்தப் பெண் பழியையும், சம்பாதித்துக் கொள்ள வேண்டிய-