பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசாட்ரியைம்‌ துறந்தேகுதல்‌

351

அந்தப் பிரகாரம் தென்புறத்தில் இறங்கி, அருணோதயத்துக்கு அடிவாரத்தில் வந்து சேர்ந்தோம். அடிவாரத்தில் முன்னே இருந்த காடுகளெல்லாம் அழிக்கப்பட்டுப் போய், மனுஷர்கள் சஞ்சரிக்கும்படியாயிருந்தது. உடனே நாங்கள் ஸ்வாமிக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரஞ் செய்துகொண்டு தெற்கு வழியாக கடு நடையாக நடந்து போனோம். ஞானாம்பாள் ஆண் வேஷத்தை மாற்றிப் பெண் வடிவாகவே வந்தாள். ஒரு பெரிய ராஜாங்கத்தையும் திவ்விய சுந்தரமான ஒரு ராஜ புத்திரியையும் வேண்டாமென்று விட்டுவிட்டு ஓடுகிறவர்கள் எங்களைத் தவிர வேறொருவரும் இருக்கமாட்டார்கள்.

பயம் பின்னே யிருந்து எங்களைப் பிடித்துத் தள்ளிக்கொண்டு போனதால், ஓடுகிற சிரமங்கூடத் தெரியாமல் காத வழி தூரம் ஓடினோம். பிறகு கொஞ்ச தூரத்தில் ஒரு பெரிய கூடாரம் அடிக்கப்பட்டிருந்தது. “யாரோ வந்து கூடாரம் அடித்திருக்கிறார்கள்” என்று நாங்கள் பேசிக்கொண்டு அந்தக் கூடாரத்துக்கு நேரே போய் உள்ளே நுழைந்தோம். தேவராஜப் பிள்ளையுங் கனகசபையும் உள்ளேயிருந்தவர்கள் எங்களைக் கண்டவுடனே ஆவலுடன் ஓடி வந்து தழுவிக்கொண்டு, சற்று நேரம் அங்கலாய்த்துப் பிறகு களிகூர்ந்தார்கள். நான் தேவராஜப்பிள்ளையையுப் பார்த்து “ஐயா! நாங்கள் பெரிய ஆபத்துக்குத் தப்பி ஓடிவந்திருக்கிறோம். சிலவிசை யாராவது எங்களைத் தொடர்ந்து வந்தாலும் வருவார்கள். ஆகையால் நாம் புறப்பட்டு ஆதியூருக்குப் போவது நன்மை. வழியிற் போகும்போது சகல சமாசாரங்களும் சொல்லுகிறேன்” என்றேன். உடனே இரண்டு வண்டிகளிற் குதிரைகள் பூட்டி, ஒரு வண்டியில் ஞானாம்பாளை ஏற்றுவித்துக்கொண்டு, மற்றொரு வண்டியில் நானும் தேவராஜப் பிள்ளையும் கனகசபையும் ஏறிக்கொண்டு புறப்பட்டோம். என்னையும் ஞானாம்பாளையும் பட்டத்து யானை தூக்கிக்கொண்டு போய் மலையில் விட்டதும், நாங்கள் விக்கிரமபுரிக்குப் போய் அரசாண்ட-