பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆநத்தவல்லிக்கு மகுடாபிஷேகம்‌

357

துஷ்டியாகவே யிருந்தாள். பிறகு நாங்களும் எங்கள் தாய் தந்தையர் முதலியவர்களும் விக்கிரமபுரிக்குப் போய் எங்கள் கையாலே ஆநந்தவல்லிக்கு மகுடாபிஷேகஞ் செய்வித்தோம். அந்த ஊரார் தங்களை ஆண்ட மகாராஜா பெண்ணென்று தெரிந்த உடனே முன்னையைப் பார்க்கிலும் பதின்மடங்கு அதிக விசுவாசமும் பக்தியும் உள்ளவர்களாய் ஞானாம்பாளையும் என்னையும் மட்டுமிதமில்லாமல் வாழ்த்தினார்கள். நாங்கள் அந்த வாழ்த்துக்களே பரம பிரயோஜனமாக எண்ணி மன மகிழ்ச்சியுடன் ஆதியூருக்குத் திரும்பினோம்.




46-ஆம் அதிகாரம்
ஊருக்குத் திரும்புதல்—துக்கப்படுகிறவர்கள்
முடிவில் சுகம் அடைவார்கள்

நாங்கள் ஆதியூருக்குப் போய் ஒரு நாள் தங்கி யிருந்து, மறு நாள் தேவராஜ பிள்ளை முதலானவர்களிடத்தில் அநுக்ஞை பெற்றுக் கொண்டு சத்தியபுரிக்குப் பயணப் பட்டோம். நாங்கள் போகிற மார்க்கங்களில் உள்ள ஊர்களில், வைசூரி கண்டு, அநேக ஜனங்கள் மடிந்து போனார்கள். சில பிரேதங்கள் எடுத்து அடக்கஞ் செய்யப் பாத்தியஸ்தர்களில்லாமல் நாங்கள் செலவு கொடுத்துச் சேமிக்கும்படிச் செய்வித்தோம். ஆதியூருக்கும் சத்தியபுரிக்கும் நடு மத்தி யமான சந்திரகிரி யென்னும்