பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாண்டவள்‌ மீண்ட புதுமை

365

மௌனமாயிருந்தேன். உடனே தேவராஜப் பிள்ளை என்னைப் பார்த்து “சந்தோஷச் செய்தி கொண்டு வந்திருக்கிறோம். நீங்கள் அழவேண்டாம். உங்களுடைய துக்கத்தை கடவுள் சந்தோஷமாக மாற்றிவிட்டார். எப்படியென்றால் உங்களுடைய துக்கக் கடிதம் வந்தவுடனே நாங்கள் அளவிறந்த துக்காக்கிரந்தர்களாய் உங்களை வந்து கண்டுகொள்வதற்காக உடனே பயணம் புறப்பட்டோம். நாங்கள் சந்திரகிரியில் வந்து சேர்ந்து உடனே ஞானாம்பாள் இறந்தவகையைக் குறித்து விசாரிப்பதற்காக வைத்தியசாலைக்குப் போனோம். அம்மை வியாதியின் கடுமையினால் ஞானாம்பாளுக்கு வெகு நேரம் மூச்சு அடங்கியிருந்ததாகவும், அதைக் கொண்டு அவள் இறந்து போனதாக எண்ணி அடக்கத்துக்கு யத்தனஞ் செய்ததாகவும், பிறகு ஸ்வாமி கிருபையினால் ஞானாம்பாளுக்குப் போன பிராணன் திரும்பி வந்து விட்டதாகவும். இன்னமும் அவள் வைத்திய சாலையிலே இருப்பதாகவும், இனி மேல் ஜீவபயமில்லை யென்றும் கேள்விப் பட்டோம். உடனே வைத்தியசாலைக்குள்ளே போய் ஞானாம்பாளையும் பார்வையிட்டுப் பரம சந்தோஷம் அடைந்தோம். ஞானாம்பாளுக்கு வைத்தியம் பார்த்த டாக்டர்களை எனக்குத் தெரியுமானதால் ஞானாம்பாளை ஊருக்கு அழைத்துக் கொண்டு போவதற்காக என் வசத்தில் ஒப்புவிக்கும்படி கேட்டுக் கொண்டேன். அவர்கள் “ஞானாம்பாள் மிகவும் துர்ப்பலமாயிருப்பதால் இரண்டு நாளைக்குப் பிறகு அழைத்துக் கொண்டு போகவேண்டும்” என்றார்கள். நாங்கள் அந்தப் பிரகாரம் மூன்று நாள் வரைக்குங் காத்திருந்து ஞானாம்பாளை அழைத்துக்கொண்டு வந்திருக்கிறோம். ஞானாம்பாளும் என்னுடைய மனைவியும் மருமகளும் ஒரு வண்டியில் இதோ வருகிறார்கள். நாங்கள் இந்தச் சந்தோஷச் சமாசாரஞ் சொல்வதற்காக முந்திவந்தோம்” என்றார். அவர் வார்த்தை முடிவதற்குமுன் ஞானாம்பாளும் மற்றவர்களும் வந்து உள்ளே புகுந்தார்கள். நான் என் காதலியைக்