பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அனைவரும்‌ கூடி மகிழ்தல்‌

367

இனிப் பெண்ரூபம் எடுக்கவேண்டாம்” என்று சொல்லி இரு கைகளையுங் கூப்பிக் கும்பிட்டாள். உடனே சம்பந்த முதலியார் வந்து மகளைப் பார்த்து “ஆம் அம்மா! ஆண் பிள்ளை இல்லையென்று உன் தாயாருக்கும் எனக்கும் உண்டாயிருக்கிற வருத்தந் தீரும் பொருட்டு நீ ஆணாகவே இருந்துவிடு” என்றார். அப்போது நான் ஞானாம்பாளை நோக்கி “இவர்களுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டு என்னைத் தெருவில் விடாதே! ஞானாம்பாள்!” என்றேன். இதைக் கேட்ட உடனே அண்டகடாகமும் வெடிக்கும்படியாக எல்லாரும் துள்ளித் துள்ளி விழுந்து சிரித்தார்கள். நான் விக்கிரமபுரிக்குப் போன உடனே அந்தத் துர்வழக்காளிகளிடத்திலும் காவற் சேவகர்களிடத்திலும் அகப்பட்டுக் கொண்டு அவஸ்தைப்பட்ட பாவனையாக வேஷம் போட்டுக் காட்டும்படி என் பாட்டியார் என்னை வேண்டிக் கொண்டார்கள். நான் என் பாட்டியாரைப் பார்த்து “அந்தப் பாவிகளை மனசிலே நினைத்தாலும் எனக்குச் சிம்ம சொப்பனமாயிருக்கிறது. வேடிக்கைக்குக் கூட அந்த வேஷம் போட என் மனந் துணியவில்லை” என்று சொல்லி நிராகரித்து விட்டேன். பிறகு ஊரில் இருந்து வந்தவர்கள் எல்லாருந் தனித்தனியே எங்களிடத்தில் விடை பெற்றுக்கொண்டு அவர்களுடைய ஊருக்குப் பிரயாணம் ஆனார்கள்.

ஆநந்தவல்லி அவளுக்குப் பந்துவான ராஜகுமாரனைப் பாணிக்கிரகஞ் செய்துகொண்டு க்ஷேமமாயிருக்கிறாள். விக்கிரமபுரிக்குஞ் சத்தியபுரிக்கும் விவாகம் ஆனது போல் அந்த ஊர்கள் ஒன்றையொன்று எப்போதுந் தழுவிக் கொண்டேயிருக்கின்றன. அந்த ஊரில் இருக்கிறவர்கள் இந்த ஊருக்கும் இந்த ஊரில் இருக்கிறவர்கள் அந்த ஊருக்கும் அடிக்கடி போக்குவரவாயிருக்கிறார்கள். அப்படியே சத்தியபுரியும் ஆதியூரும் சவுக்கியமாகவே யிருக்கின்றன. என் தாயாருடைய கீர்த்திப் பிரதாபமும் ஞானாம்பாளுடைய கியாதியும் ஐரோப்பா வரைக்கும் எட்டி, சக்கரவர்த்தினி யவர்கள்