பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

பிரதாப முதலியார்‌ சத்திரம்‌

கவிகளின் அர்த்தம் கனகசபைக்கு மட்டும் புலப்படுகின்றது; எனக்குப் புலப்படவில்லை. சில கவிகளின் பொருள் அவனுக்கும் விளங்கவில்லை; எனக்கும் விளங்கவில்லை. அன்றியும் அநேக கவிகளுக்குச் சந்தமே தெரியவில்லை. சந்தந் தெரிகிற கவிகளுக்குப் பொருள் தெரியவில்லை. பொருள் தெரிகிற கவிகள், இலக்கண விதிக்கு ஒத்திருக்கவில்லை. ஆகையால் அந்தக் கவிகளை, இந்தப் புஸ்தகத்தில் சேர்க்காமல் விட்டு விட்டேன்.ரு புலவர், நான் பாடின ஒரு கவியைப் பார்த்து, அதை நான் கம்பராமாயணத்திலிருந்து திருடிக் கொண்டதாகக் குறை கூறினார். "நான் திருடவே யில்லை" என்றேன். அவர் அந்தக் கவி, கம்பராமாயணத்திலிருப்பதாகக் காட்டினார். நான் உடனே அவரைப் பார்த்து, "நான் அந்தக் கவியைக் கம்பராமாயணத்திலிருந்து திருடி எடுத்துக் கொண்டு போனால், பிறகு அந்தக் கவி கமபராமாயணத்தில் எப்படி இருக்கக் கூடும்? ஆகையால் நான் திருடவில்லையென்பதற்கு அந்தக் கவி, கம்பராமாயணத்திலிருப்பதுவே சாக்ஷி" என்று மெய்ப்பித்தேன்.

ஒரு மூடன் என்னைப் பார்த்து, "சகல மனுஷர்களும் பிழை செய்வது சகஜம்; இந்த விஷயத்தில் விவேகிக்கும் அவிவேகிக்கும் என்ன பேதம்?' என்றான். நான் அவனை நோக்கி "அவிவேகியின் குற்றம், அவனுக்கு மட்டுந் தெரியாது; உலகத்துக்கெல்லாம் தெரியும்; விவேகியின் குற்றம், அவனுக்கு மட்டுந் தெரியும்; உலகத்துத் தெரியாது" என்றேன்.