பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புது ஆசிரியர் நியமனம்

19


3-ஆம் அதிகாரம்
சம்பந்தி முதலியார் சரித்திரம்
ஞானாம்பாளுடைய குணாதிசயங்களும்
கல்வித் திறமையும்

எனக்காகக் கனகசபை படிப்பதும், எனக்காக அவன் அடிபடுவதும், என் தாயாருக்குச் சிலநாள் வரைக்கும் தெரியாமலிருந்து, பிற்பாடு தெரிந்ததாகக் தோன்றுகிறது. ஒருநாள், அவர்கள் என்னையும் கனகசபையையும் அழைத்து, இருவருக்கும் இலைபோட்டுக் கனகசபை இலையில் மட்டும், அன்னம் பட்சணம் முதலியவைகளைப் படைத்து, என்னுடைய இலையில் ஒன்றும் படையாமல் வெறுமையாய் விட்டுவிட்டார்கள். என் மாதாவைப் பார்த்து, எனக்கும் அன்னம் படைக்கும்படி வேண்டினேன். அவர்கள் கனகசபை அமுது செய்வதைப் பார்த்துக் கொண்டிரு என்றார்கள். அவன் அமுது செய்கிறதைப் பார்த்துக்கொண்டிருந்தால், எனக்குப் பசி அடங்குமா? என்றேன். அவன் படிக்கிறதையும் அடிபடுகிறதையும் நீ பார்த்துக் கொண்டிருந்தால், உனக்கு வித்தை வருமா? என்றார்கள். நான் உடனே நாணம் அடைந்து, மாதாவின் முகத்தைப் பார்க்கிறதைவிட்டு பூமிதேவி முகத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். அன்றைய தினம் எனக்கு அன்னப்பிடி வெல்லப்பிடியாய் விட்டது. எனக்காக ஒரு ஏழைப்பிள்ளையை அடிபடும்படி செய்வித்தது பெரிய அக்கிரமமென்று என் தாயார் விஸ்தாபிரஸங்கஞ் செய்ததுமின்றி என்னைப் பார்த்து நீ படவேண்டிய அடியை கனகசபை ஏற்றுக்கொண்டால், நீ அனுபவிக்கிற சுகங்களிலும் அவனுக்குப் பங்கு கிடைக்கவேண்டியது நியாயம் என்று சொல்லி, அன்று முதல் அன்ன வஸ்திரபூஷணாதி விஷயங்களில், எனக்குங் கனகசபைக்கும் யாதோரு பேதமு மில்லாமல் இருவரையும் ஒரே தன்மையாய் நடத்தி வந்தார்கள். இனிமேல் நான் என் வீட்டில்