பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புது ஆசிரியர்‌ நியமனம்‌

21

விட்டது போல் இருக்கும். சங்கீதம் வாசிக்கிறவர்கள் "தா, தா" என்று தாளம் போட்டாலும், அவர் சண்டைக்கு வருவார்; யாராயினும் ஒருவர் தாதனைப் பார்த்து "தாதா" என்று கூப்பிட்டாலும் அவர் சகிக்க மாட்டார். இப்படிப்பட்ட கிருபண சிரோமணியை ஞானாம்பாள் ஐந்து வயதுக் குழந்தையாயிருக்கும்போது ஒரு வார்த்தையினாலே திருப்பி விட்டாள். எப்படியென்றால், அவருடைய கிராமக் குடிகள் செலுத்தவேண்டிய குத்தகைப் பணத்தை எடுத்துக் கொண்டு ஒரு நாள் அவருடைய வீட்டுக்கு வந்தார்கள். அவர்களை அவர், பொக்கிஷ அறைக்குள் அழைத்துக் கொண்டு போய், அவர்கள் கொண்டுவந்த பணத்தைத் திருப்பித் திருப்பிப் பத்து தரம் எண்ணி வாங்கி வைத்துக் கொண்டு அவர்களுக்குச் செலவு கொடுத்து அனுப்பினார். அவர்கள் வெளியே போகும்போது, "அந்த லோபியின் பணப் பெட்டிகளை நாம் பார்த்துவிட்டோம்; ஆதலால், நாமும் இனிமேல் பணக்காரர்கள் தான். அவரும் பணத்தைப் பார்க்கிறதைத் தவிர செலவழிக்கிறதில்லை. நாமும் அப்படித்தான்" என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டு போனார்கள். அப்போது, தெருவில் விளையாடிக் கொண்டு தகப்பனாரிடம் போய் "ஐயா! லோபி என்றால் என்ன அர்த்தம்?" என்று கேட்டாள். அவர் "லோபி என்றால் ஈயாதவன்" என்று சொன்னார். அவள் "அப்படியானால், உங்களைப் பல பேர்கள் லோபி லோபி என்று சொல்லுகிறார்கள்.. உங்களுக்கு மகளாயிருக்க எனக்கு வெட்கமா யிருக்கிறது" என்று மழலைச் சொல்லால் உளறிக்கொண்டு சொன்னதைக் கேட்டவுடனே, சம்பந்தி முதலியாருக்கு வெட்கமுண்டாகி அன்று முதல் அவர் லோப குணத்தை விட்டு "தாதா" என்று பல பேரும் சொல்லும்படி புது மனுஷனாக மாறிவிட்டார்.

ஞானாம்பாளுடைய புத்தி தீக்ஷண்ணியம் தெரியும்படியாக இன்னொரு விசேஷம் தெரிவிக்கிறேன். ஒரு நாள்,