பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

பிரதாப முதலியார்‌ சரித்திரம்‌

அந்த வருத்தத்தை நீக்கும் பொருட்டு எங்களைப் பார்த்து ஞானாம்பாள் சொல்கிறாள்: "ஸ்திரீகள் எவ்வளவு படித்தாலும் புருஷர்களை வெல்ல மாட்டார்கள்; ஸ்திரீகள் சொற்பகாலத்தில் வளர்ந்து புஷ்பித்து சீக்கிரத்தில் கெட்டுப் போகிற சிறு செடிகளுக்குச் சமானமாயிருக்கிறார்கள். புருஷர்களோ என்றால், வெகுநாள் தாமதப்பட்டு வளர்ந்து நெடுநாள் வரைக்கும் பலன் கொடுக்கிற விருக்ஷங்களுக்குச் சமானமாயிருக்கிறார்கள். ஸ்திரீகளுக்கு யௌவனமும், புத்தியும் சீகிரத்தில் வந்து, சீக்கிரத்தில் மாறிப் போகின்றன. புருஷர்களுக்கு யௌவனமும் புத்தியும் தாமதித்து வருகிற படியால், நெடுங்காலம் நீடித்திருக்கிறது" என்றாள். அதைக் கேட்டவுடனே எங்களுடைய வெட்கம் நீங்கி, நாங்கள் மேலும் மேலும் கல்வியில் முயல மனோற்சாகம் உண்டாயிற்று.




4 ஆம் அதிகாரம்
பிரதாப முதலியாரின் தாயார் கன்னிப்
பருவமாயிருக்கும்போது நடந்த வர்த்தமானம்
நல்ல மருமகள்

ஒரு நாள் நானும் ஞானாம்பாளும் படித்துக்கொண்டிருக்கும்போது, என் பாட்டியார் என்னைப் பார்க்க வந்தார்கள். அவர்களைக் கண்டவுடனே, ஞானாம்பாள் அவ்விடத்திலே கிடந்த பிரம்பை எடுத்து ஒளிப்பது போல் ஜாலம் செய்தாள். "என்னைக் கண்டவுடனே ஏனம்மா பிரம்பை எடுத்து ஒளிக்கிறாய்?" என்று என் பாட்டியார் கேட்க,