பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தரத் தண்ணி சிறுபருவ நிகழ்ச்சி

25

ஞானாம்பாள் "உங்களுடைய பேரனுக்குப் பாடத் தெரியாவிட்டால் என்னை அடிப்பீர்களென்று பயந்து, பிரம்பை ஒளித்தேன். அடி படுவதற்குக் கனக சபை அண்ணனும் இங்கே இல்லையே!" என்றாள். உடனே என் பாட்டியார் ஞானாம்பாளைக் கட்டிப் பிடித்து "என் புத்தியுள்ள செல்வமே!" என்று ஒரு முத்தம் கொடுத்துவிட்டுப் பிறகு என்னைப் பார்த்துச் சொல்லுகிறார்கள்.

"விளையும் பயிர் முளையிலே தெரியும்" என்பது போல ஞானாம்பாள் இவ்வளவு சிறு பிராயத்தில் நடக்கிற கிரமத்தையும் ஒழுங்கையும் யோசிக்குமிடத்தில், அவள் அறிவிலும் நற்குணங்களிலும், உன் தாயாருக்குச் சமானம் ஆவாளென்று நினைக்கின்றேன்; உன் தாயாருக்குக் கல்யாணம் ஆவதற்கு முன் நடந்த ஒரு அதிசயத்தைத் தெரிவிக்கிறேன் கேள்!" என்று என் பாட்டியார் சொல்லத் தொடங்கினார்கள். "உன் தாயார் கன்னிகையா யிருக்கும்போது, அவளுடைய குண அழகையும் ரூபலாவண்ணியத்தையும் கேள்வியுற்று, அவளை மணஞ் செய்வதற்கு நம்முடைய பந்துக்களில் அநேகர் விரும்பியும், முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் பட்டது போல, அவர்களுடைய எண்ணம் நிறைவேறாமற் போயிற்று. நமக்கு நெருங்கிய பந்துத்வம் உடைய பேராவூர் நீலகண்ட முதலியும் உன் தாயாரைக் கொள்ள, பகீரதப் பிரயத்தனஞ் செய்தான்; அந்தப் பிரயத்தனம் பலிக்காமற் போய்விட்டதால், தாயாரை எவ்வகையிலாவது சிறை எடுத்துக் கொண்டுபோய், பலவந்தமாய் விவாகஞ் செய்துகொள்ளுகிறதென்று தீர்மானித்துக் கொண்டு அதற்குத் தகுந்த சமயமும் தேடிக் கொண்டிருந்தான்; அவனுக்கு ஒரு சமயமும் வாய்த்தது. எப்படியென்றால், உன்னுடைய மாதாமகர் முதலான புருஷர்களெல்லாரும் இருகாதவழி தூரமான மங்கனூருக்குப் போயிருந்தார்கள்; வீட்டில் உன் தாயார் முதலான சில ஸ்திரீகளும், சில வேலைக்காரர்களும் மட்டும் இருந்தார்கள்; அந்தச் சமயத்தில் மேற்கண்ட நீலகண்ட