பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தரத்‌ தண்ணி சிறுபருவ நிகழ்ச்சி

27

பண்டியை நிறுத்திக் கீழே குதித்தான். பண்டி நின்றவுடனே, அது நிற்கவேண்டிய காரணம் என்ன என்று விசாரிப்பதற்காக உன் தாயார் ஜன்னலைத் திறந்தாள்; உடனே அந்தச் சாரதி குடிவெறியுடனே வந்து, "வெற்றிலை பாக்குப் பை கீழே விழுந்து விட்டது. அதைத் தேடிக்கொண்டு வருகிறேன் அம்மா" என்று சொல்லிவிட்டு, வந்த வழியைப் பார்த்துக் கொண்டு போனான்; அவன் போன பிற்பாடு, கிழக்கு ரஸ்தா வழியாக வண்டி போகிற விவரம், உன் தாயாருக்குத் தெரிந்தது. உடனே வண்டியை விட்டுக் கீழே குதித்தாள். அந்த பண்டியில் ஒரு பக்கத்தில் "நீலகண்ட முதலி" என்று பெயர் வரையப்பட்டிருந்ததாலும், அந்தக் கிழக்கு ரஸ்தா அவனுடைய ஊருக்குப் போகிற மார்க்கமென்பது உன் தாயாருக்குத் தெரியுமானதாலும் சகலமும் அவனுடைய கபட நாடகமென்று உன் தாயார் ஒரு நிமிஷத்தில் கண்டுபிடித்துக் கொண்டாள். அவள் சிறு பருவ முதல், குதிரை கட்டின பண்டிகளில் ஏறி, சில சமயங்களில் சாரத்தியம் செய்வதும் அவளுக்குப் பழக்கமாயிருந்தபடியால், அவள் ஒரு நிமிஷத்தில் அந்த பண்டியில் சாரதி ஸ்தானத்தில் ஏறி உட்கார்ந்து குதிரைகளை மேற்கே திருப்பி, வாயு கதியாக வண்டியை நடத்த ஆரம்பித்தாள், பையைத் தேடிப் போன சாரதி, பண்டி திரும்பி வருவதைக் கண்டு குடி மயக்கத்தினால் தள்ளாடித் தள்ளாடி விழுந்துகொண்டு, வண்டியை மறிக்க ஓடிவந்தான். அவன் கிட்ட நெருங்காதபடி உன் தாயார் குதிரைச் சவுக்கால் ஓங்கி ஓங்கி அடித்தாள்; அந்த அடியும் அவனுடைய குடியும் அவனைக் கீழே தள்ளி விட்டன; உன் தாயார் மனோகதியும் பிந்தும்படி மங்கனூர்ச் சாலை மார்க்கமாக பண்டியை நடத்திக் கொண்டு போகும்போது, நீலகண்ட முதலி, ஒரு குதிரையின் மேல் ஏறிக் கொண்டு பண்டியைத் தொடர்ந்து வந்து பண்டிக்கு முன்னாலே மறித்தான்; பண்டியிலே பூட்டிய இரண்டு பரிகளும் நிற்காமல், நீலகண்ட முதலி மேலே