பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனகசபை மதிட்பம்‌

31

கனகசபை நற்குணமும், நற்செய்கையும் உடையவனாயும், விவேக விற்பன்னனாயும், சர்வ ஜன ரஞ்சகனாயும் இருந்தான். அவனுடைய புத்திநுட்பந் தெரியும் பொருட்டு, அவனுடைய இளமைப் பருவத்தில் நடந்த ஒரு காரியத்தைத் தெரிவிக்கிறேன். அஃதென்னவெனில், சென்னைபுரி கவர்னர் தேச சஞ்சாரஞ் செய்துகொண்டு வருகையில், சத்தியபுரியில் கூடாரம் அடித்துக் கொண்டு அவருடைய பரிவாரங்களுடன் சில நாள் தங்கி இருந்தார். அப்போது ஒரு நாள் அவர் மட்டுந் தனியாய்ப் புறப்பட்டு வாகனாரூடராய், ஊரைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வரும்போது அவருக்கு மறுபடியும் கூடாரத்துக்குப் போக மார்க்கந் தெரியாமையினால், வழியில் நின்று கொண்டிருந்த கனகசபையைக் கூப்பிட்டுக் கூடாரத்துக்குப் போகிற மார்க்கத்தைக் காட்டும்படி கேட்டுக் கொண்டார். அவர், கவர்னர் என்பது கனகசபைக்குத் தெரியாதாகையால் :நான் அவ்வளவு தூரம் எப்படி நடந்துவந்து வழி காட்டுவேன்?" என்று ஆக்ஷேபித்தான். உடனே கவர்னர், தம்முடன் கூட வண்டியில் ஏறிக் கொள்ளும்படி சொன்னதால், அந்தப் பிரகாரம் கனகசபையும் வண்டியில் ஏறி வழி காட்டிக் கொண்டு போனான். அவர்கள் வழியிற் போகும்போது கனகசபை கவர்னரை நோக்கி, "ஐயா! கவர்னர் அவர்களுடைய கூடாரத்தில் பல துரைமார்கள் இருப்பார்களே! அவர்களுக்குள் கவர்னர் இன்னாரென்று தெரிந்து கொள்வதற்கு விசேஷ அடையாளம் என்ன?" என்று கேட்க, கவர்னர் கனகசபையைப் பார்த்து, "கவர்னரைக் கண்டவுடனே எல்லாரும் எழுந்து தொப்பியைக் கழற்றி நின்றுகொண்டு வணங்குவார்கள்; கவர்னர் மட்டும் உட்கார்ந்தபடியே இருப்பார். இது தான் அடையாளம்" என்றார். இவ்வகையாகச் சம்பாஷித்துக் கொண்டு அவர்கள் கூடாரத்தைச் சமீபித்தவுடன், கூடாரத்தில் இருந்தவர்கள் எல்லாரும் எழுந்து தொப்பியைக் கழட்டிக் கொண்டு கவர்னர் வருகிற வண்டியை நோக்கி வந்தனஞ் செய்தார்கள். அப்போது கவர்னர் கனசபையைப்