பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனகசபைக்கு நேர்ந்த ஆபத்து

33

சமீபத்தில் இல்லையால் தூரத்தில் ரஸ்தாவில் நடந்து கொண்டிருந்த ஒரு சந்நியாசியை "ஐயா! ஐயா!" வென்று கூப்பிட்டுக் கொண்டு, மான் போலவும், மயில் போலவும் அதி வேகமாக ஓடினாள். அவள் தனிமையாக ஓடுகிறதைப் பார்த்து நானுங் கூட ஓடினேன். ஞானாம்பாள் சந்நியாசியாரை நோக்கி, "ஐயா! ஒரு சிறுவன், குளத்தில் விழுந்து விட்டான்; தாங்கள் தயவு செய்து வந்து அவனைக் கரையேற்ற வேண்டும்" என்று மிகவும் வணக்கத்துடனே பிரார்த்தித்தாள். அந்தச் சந்நியாசியாரும் உடனே திரும்பி எங்களுடன் ஓடி வந்தார். அவர் ஓடி வரும்போதே ஞானாம்பாளைப் பார்த்து, "அந்தப் பிள்ளையை நான் கரையேற்றினால், நீ காதில் போட்டிருக்கிற வயிர ஓலைகள் முதலிய நகைகளைக் கொடுப்பாயா?" என, அவள் "அப்படியே தருகிறேன்" என்றாள். நாங்கள் வரப் பின்னுஞ் சற்று நேரம் தாமதப் பட்டிருக்குமானால், கனகசபை ஜலத்தில் மூழ்கி இறந்து போயிருப்பானென்பது நிஸ்ஸந்தேகம். ஞானாம்பாளுடைய அதி தீவிர முயற்சியால் அவன் பிழைத்தான். எப்படியென்றால், சந்நியாசியார் ஒரு நிமிஷத்தில் தடாகத்தில் குதித்துக் கனகசபையைக் கரையேற்றி விட்டார். அவன் ஜலத்தைக் குடித்து மூர்ச்சையா யிருந்ததால், அவன் குடித்த ஜலம் வெளிப்படும்படி, சந்நியாசியார் தகுந்த பக்குவங்கள் செய்து அவன் பிராணனை ரக்ஷித்தார். உடனே ஞானாம்பாள் தன் காதில் இருந்த பூஷணங்களைக் கழற்ற ஆரம்பித்தாள். சந்நியாசியார் "வேண்டாம்! வேண்டாம்!" என்று கையமர்த்தி, ஞானாம்பாளைப் பார்த்து "உன்னுடைய மனோதர்மத்தை அறிவதற்காக அந்த நகைகளைக் கேட்டேன். அவைகளை நீ கொடுத்தாலும் நான் அங்கீகரிப்பேனா? ஒரு பிராணனை ரக்ஷித்த புண்ணியம் எனக்குப் போதாதா? எனக்கு இயற்கையாக இல்லாவிட்டாலும் உன்னைப் பார்த்த பிறகாகிலும் எனக்குத் தர்ம சிந்தனை இல்லாமற் போகுமா? இவ்வளவு சிறு

3