பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

பிரதாப முதலியார்‌ சரித்திரம்‌

அல்லவோ அவனைக் காணும்படியான பாக்கியம் பெற்றேன்!" என்று சொல்லித் துதித்தார்.

இப்படியாக நிகழ்ந்த அதிசயங்களைக் கேள்விப் பட்டு, எங்கள் தாய் தந்தைமார்கள் சுற்றத்தார் யாவரும் வந்து சூழ்ந்து கொண்டு அவருக்கும், அவருடைய பத்தினிக்கும் தகுந்த ஆசனங்கள் கொடுத்து வீற்றிருக்கச் செய்தார்கள். அவர்கள் இன்னாரென்றும் அவர்களிடத்தில் என்னது பேசுகிறதென்றுந் தெரியாமல் பிரமித்துப் போய் உட்கார்ந்திருந்தோம். அவர்கள் எங்களை நோக்கி, "ஓ! புண்ணியவான்களே! புண்ணியவதிகளே! நீங்கள் இந்நாள் மட்டும் என் மகனுக்குச் செய்து வந்த உபகாரங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்? நான் இன்னானென்றும் இந்தப் பிள்ளையை நான் பிரிந்திருந்த காரணத்தையும் நீங்கள் அறிய விரும்புவீர்களாதலால் அதைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கிறேன். அதிக செல்வமும் சிறப்பும் பொருந்திய ஆதியூர் பாளையப்பட்டுக்கு நான் அதிபதி. நாங்கள் பூர்வீக அரசர்களுக்கு முடியெடுத்து வைக்கிற வேளாளர்களானதால், எங்களுக்கு அநேக கிராமங்களும் பூமிகளும் தானமாய்க் கிடைத்து, சர்வ சுதந்திரமாக அநுபவித்து வருகிறோம். என்னுடைய தகப்பனார் ஆதிமூலம் பிள்ளைக்கு நானும் என் தம்பியாகிய தெய்வநாயகம் பிள்ளையும் புத்திரர்கள்; என் பேர் தேவராஜப் பிள்ளை. எங்கள் குடும்பத்தில் ஜேஷ்ட புத்திரர்களுக்கும், அவர்களுடைய சந்ததிகளுக்கும் பட்டம் ஆகிறதே தவிர, கனிஷ்டர்களுக்குப் பட்டம் ஆகிறதில்லை; ஆனால் ஜேஷ்டர்களுக்குச் சந்ததி இல்லாவிட்டால், கனிஷ்டர்களுக்குப் பாத்தியம் உண்டாகும்; நான் மூத்தவன் ஆனதால் எனக்குப் பட்டாபிஷேகம் ஆகி, என் தம்பி என்னுடைய சம்ரக்ஷணையிலிருந்து வந்தான்; இதற்குப் பன்னிரண்டு வருஷத்துக்கு முன், இந்தக் குழந்தையை என் பத்தினி பிரசவித்தாள்; ஆறு