பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனகசபை பெற்றோர்‌ வருகை

39

மாசத்துக் குழந்தையாயிருக்கும்போது எனக்குக் குரூரமான வியாதி கண்டு, எங்கள் குடும்ப வைத்தியர்கள் பலர் ஔஷதம் கொடுத்தும் சௌக்கியப்பட வில்லை; இங்கிலீஷ் டாக்டர்கள் மருந்து கொடுத்துக் கொஞ்சம் சௌக்கியமான உடனே, நான் தேச யாத்திரை செய்தால், எனக்கு முழுதும் சௌக்கியமாகுமென்று வற்புறுத்திச் சொன்னார்கள்; இந்தக் குழந்தை அதி பால்யமாயிருந்ததால் அதை நாங்கள் கூடக் கொண்டுபோகாமல், என் தம்பி வசத்தில் ஒப்புவித்துப் பாளையத்தைச் சேர்ந்த காரியங்களையும் அவனே பார்க்கும்படி திட்டஞ் செய்து, நானும் என் பெண்ஜாதியும் பரிவாரங்களும் தேச யாத்திரை செய்யப் புறப்பட்டோம். பங்காளம் பம்பாய் முதலான இடங்களெல்லாம் சுற்றிக் கொண்டு நாங்கள் திரும்பிவர ஆறுமாசம் சென்றது; நாங்கள் பங்காளத்தில் இருக்கும்போது, எங்கள் தம்பி யிடத்திலிருந்து வந்த கடிதத்தில், எங்கள் பிள்ளை சுழிமாந்தங் கண்டு இறந்துபோனதாக எழுதியிருந்த படியால், நானும் என் பத்தினியும் பட்ட துயரம் இவ்வளவென்று சொல்லி முடியாது. என் பாரியாள் மட்டும் பிள்ளை விஷயத்தில் ஏதாவது மோசம் நடந்திருக்குமென்று சந்தேகித்தாள். எனக்கு என் தம்பியிடத்தில் இருந்த விசுவாசத்தினால் அவள் சந்தேகப்படுவது சரியல்ல என்று கண்டித்தேன்; நாங்கள் ஊருக்கு வந்த பிறகு பிள்ளை இறந்தது வாஸ்தவமென்று சகலரும் பிரஸ்தாபித்து வந்தபடியால், என் மனையாளுடைய சந்தேகமும் நிவர்த்தியாய் விட்டது.

பிற்பாடு சீமாமூலகாரியங்களை நானே வகித்துப் பார்த்துக் கொண்டு வந்தேன். என் தம்பி சில நாள் வியாதியாயிருந்து, ஒரு மாசத்துக்குமுன் தேக வியோகமானான். அவன் இறந்த விசனத்தால் அவன் பிரேதத்தின் மேல் விழுந்து புலம்பி அழுதேன். அப்போது அவன் இடுப்பிலிருந்து ஒரு கடிதம் வெளிப்பட்டது; அது என் பேரால் மேல் விலாசம் எழுதப் பட்டு, முத்திரிக்கப்பட்டிருந்த படியால்,