பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

பிரதாப முதலியார்‌ சரித்திரம்‌

பரிவாரங்களுடன் சென்றுவிட்டார்கள். கூடப் பிறந்த அன்புள்ள சகோதரன் போல நெடுங்காலம் என்னுடன் கூட இருந்து, சகல சுகதுக்கங்களுக்கும் உடந்தையாயிருந்த கனகசபையைப் பிரிந்தது, எனக்குப் பெரிய மனோதுக்கமும் வியாசங்கமுமாயிருந்தது. அவனுக்கு அதிபால்யத்தில் நேரிட்ட ஆபத்துகளை நீக்கி, அவனை அற்புதமாக வளர்ப்பித்த கடவுளது திருவருட் செயலை வியந்து ஸ்தோத்தரித்தேன்.




7 ஆம் அதிகாரம்
சோதிடப் பைத்தியம்

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்;
ஞானாம்பாளுக்குச் சம்பவித்த பிராணாபாய நிவர்த்தி.

நானும் ஞானாம்பாளும் ஒரு நாள் காலையில், வெளித் திண்ணையில் படித்துக்கொண்டு இருக்கும்போது, எனக்குப் பழக்கமான ஒரு ஜோதிட சாஸ்திரியார் வந்து "செலவுக்கு ஒன்றும் இல்லாமல் வருத்தப் படுகிறேன்; ஏதாவது கொடுக்கவேண்டும்" என்று கேட்டார். அப்போது கூட இருந்த எங்கள் உபாத்தியாயர், அவரைப் பார்த்து "சகலருக்கும் சாஸ்திரஞ் சொல்லிப் பாக்கியத்தைக் கொடுக்கிற உமக்குக் கஷ்டமுண்டா?" என்றார். உடனே சாஸ்திரியாருக்கு ஆக்கிரோஷமுண்டாகிச் சொல்லுகிறார்; "நாங்கள் உலகத்தை ரக்ஷிக்கும்பொருட்டு தரித்திர வேஷம் பூண்டுகொண்டு திரிகிறோமே யல்லாமல், எங்களுக்கு ஒரு கஷ்டமுண்டா? நாங்கள் கற்பக விருட்-