பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

பிரதாப முதலியார் சரித்திரம்

பார்த்து, சாதகங்கள் பார்த்து, பொருத்த நிமித்தங்கள் பார்த்து, அவர்களைக் கலியாணஞ் செய்துக் கொடுத்தேன். அந்த நாலுபேரும் அமங்கலி யாய்விட்டார்கள். மந்திரங்கால் மதி முக்கால் என்பது போல என்னுடைய புத்தியைக் கொண்டு பிழைக்கிறேனே யல்லாது, சாஸ்திரத்தைக் கொண்டு பிழைக்கவில்லை; சகலருக்கும் சுகமுந் துக்கமுங் கலந்து வருகிறபடியால், நானும் சுகத்தையும் துக்கத்தையுங் கலந்து சகலருக்கும் சாஸ்திரஞ் சொல்லிக் கொண்டு வருகிறேன்; ஆனால், சுகத்தையே யாவரும் விரும்புகிறபடியால் சுகத்தையே அதிகமாகச் சொல்லி, யாவரையும் நான் சந்தோஷப்படுத்துகிறது வழக்கம்; இப்போது காலம் விபரீதமாய்ப் போய்விட்டது.. நான் ஒருவனுக்கு யோகம் வருமென்று சொன்னால் அவனுக்குக் கஷ்டம் சம்பவிக்கின்றது; சுபிக்ஷ காலமென்று சொன்னால் துர்பிக்ஷ காலமாய் முடிகின்றது; ஒரு கர்ப்ப ஸ்திரீயைப் பார்த்து, அவளுக்குப் பிள்ளை பிறக்குமென்று சொன்னாலும் அந்தக் கர்ப்பம் பொய்யாகி, மகோதரமாய் முடிகின்றது; கர்ப்பத்திலிருக்கிற பிள்ளை கூட என்னை ஒருதரம் மோசம் செய்துவிட்டது. எப்படியென்றால், நான் நெடுநாளாக ஆசிரதம் செய்து வந்த ஒரு பிரபு, என்னை அழைத்து கர்ப்பிணியா யிருக்கிற தன் மனைவிக்கு, என்ன குழந்தை பிறக்குமென்று கேட்டார். நான் ஆண் பெண் இரண்டில் ஒன்றுதானே பிறக்கவேண்டுமென்று நினைத்து, ஆண் குழந்தை பிறக்குமென்று அவரிடத்தில் தனிமையாகச் சொன்னேன் அவருக்குத் தெரியாமல் அவருடைய மனைவியிடத்திலே போய், பெண் குழந்தை பிறக்குமென்று அதி ரகசியமாகச் சொல்லி வைத்தேன். கடைசியாய்ப் பிறந்த குழந்தை ஆணுமல்லாமல், பெண்ணுமல்லாமல் அலியாயிருந்தது. சாஸ்திர விஷயத்தில் சகலருக்கும் இருந்த நம்பிக்கையும், நாளுக்கு நாள் குறைந்துவிட்டது. இனிமேல் இந்த தொழிலை விட்டுவிடுவதென்று நான் யோசித்துக் கொண்டிருக்கும்போது, உங்களுடைய நாயே எனக்கு நல்ல புத்தி கற்பித்துவிட்டபடியால், இனி-