பக்கம்:பிராயச்சித்தம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 133 செய்ய முடியும்? அதைச் செய்துவிட்டுக் கிளம்பிவிட வேண்டும். அவள் போய்க் கேட்டால், கடன் போக நகை மதிப்பீட்டில் மிச்சம் கிடைக்கும். கிடைத்தவரை லாபம். நகை வேறு குத்துக்கல்லாய் அப்படியே இருக்கிறது. ஆனால் இந்த டபிள் ப்ரைஸ்-நியாயம் அதில் என்ன இருக்கிறது? இப்படி நினைப்பதே என் புத்தியின் அழுக்குக்கு அத்தாட்சி. - ஆனால் என்றேனும் நகையை சொந்தக்காரிக்கு திருப்பிவிட வேண்டும். அந்தப் பொறுப்பு என்னை விஷ மாய்த் தீய்க்கிறது. நான் எப்போ நகையை வெளிக் கொண்டு வந்தாலும் புதைவாணம் கிளம்பத்தான் போகி றது. லேட் சேஃபில் காணாமல் போன நகை கோமதி யிடம் எப்படி வந்தது? இதைக் கண் குத்தியாக கவனிக்க யாரேனும் இருப்பான். நகையின் ஜாதகத்தையே படிக் கிறவன்களுக்கு குறிைச்சலே இல்லை. அப்படிப் புதை வானம் கிளம்பும்போது கேஸ் புது விதமாக, புது முகத் துடன் எப்படித் திறந்து கொள்ளுமோ? அப்போது உண் மையில் வெளிச்சம் இல்லை. மூட்டம்தான். ஒன்றும் செய்வதற்கில்லை. துரங்குகிற நாயைத் தட்டி எழுப்பாதே. என் பிழைப்பு என்ன பிழைப்போ? மனக்சந்த் நீங்கள் கவர்க்கத்திலிருந்து பிச்சையிடு கிறீர்கள். - நான் செய்த தீம்புக்கு என்ன பிராயச்சித்தம்? கண் துளும்பிற்று. -