பக்கம்:பிராயச்சித்தம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 லா. ச. ராமாமிருதம் "ப்ளீஸ் பேச்சை மாற்றுவோம். நான் இங்கே விருந்: தாளி. தான் தங்கும் எல்லையை எப்பவோ மீறி விட்டேன்.” சேச்சே நீங்க அப்படி சொல்லக்கூடாது. நானும் அப்படி நினைக்கல்லே. நீங்கள் இங்கே இருப்பது வீட்டுக்குப் பெரியவாளா, என்னுடைய அதிர்ஷ்டம் என்றே நினைக்கிறேன்.' அவர் வாளாயினார். இது என்ன வஞ்சப் புகழ்ச்சியா? "தட்டுப் போடலாமா?" மூன்றானையால் முகத் தைத் துடைத்தபடி கோமதி வந்தாள். பசியின் சீறலை அவர்கள் அப்போதுதான் உனர்ந் தனர். பரிமாறிக்கொண்டே கோமதி, சாப்பாட்டுக்குப் பிறகு பத்து மணிக்கு ஒரு Surprise. Husband mine, a-fi: களுக்கு இஷ்டமிருந்தால் நீங்களும் பங்கு கொண்டுவிட்டுப் போகலாம். ஆனால் நான் சொல்லும் வேளைக்கு உங்களுக்குத் திடீரென்று அவசர ஜோலி இருக்கும். இல்லையா?” அவன் காதில் வாங்கிக்கொண்ட மாதிரி காட்டிக் கொள்ளவில்லை. அவனுடைய பொறுமை ஆச்சரியத் துக்கு உரியதாக இருந்தது. இதுவரையிலும், அவள் கங்கணம் கட்டிக்கொண்டு அவனைப்படுத்தும் அவமானங் களுக்கு அவன் எதிர்கூடப் பேசவில்லை. சுரனை அந்த அளவுக்குப் போய்விடுமா? இல்லை காரியவாதியா? இல்லை அவனுக்கு அவள்மேல் அத்துணை பாசமா? அவன் அப்படி நடந்துகொண்டதில் ஒரு பெருந்தன்மைகூடக் காண முடிந்தது. எல்லா ஸ்திரீகளிடமும் ஒரு பேய்க் குணமிருக்கிறது. காரணமற்ற, விதண்டாவாதமான, மானம் பார்க்காத