பக்கம்:பிராயச்சித்தம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 லா. ச. ராமாமிருதம் வாசல் கதவு மூடிய சத்தம் கேட்டு அடங்கியதும், அவள்: "என்ன ஸார், சும்மாயிருக்கேள்? கண்ணகி பிறந்த நாடு இது என்று பாடம் படிக்கப் போறேனா?” அவர் ஒன்றும் பேசவில்லை. தன் கோப்பையைக் கீழே வைத்தார். அவள் அவசரமாக அதையெடுத்து அதிலிருந்து பருகினாள். 'கோமதி அது என்னுடைய மிச்சம்!” "இருக்கட்டுமே!’ பாடினாள். "எச்சில் எச்சில் என் பீரே ஏது கேட்ட மானிடரே கன்றின் வாயும் எச்சில் அதுக்குமேல் தெரியாதே!' தர்மராஜன் வாய் விட்டுச் சிரித்து விட்டார். உடனேயே ஏதோ குழப்பத்தில் ஆழ்ந்தார். அவள் குஞ்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

: 泌

தன் முதுகைத் துருவும் பார்வையின் உணர்வு. யாரோ தனனைப் பின்தொடர்வது போன்ற பீதி. நடுவில் சில நாள் விட்டிருந்தது மறுபடியும் வெடுக்கெனத் திரும்பினார், எலெக்ட்ரிக் கம்பத்தின் மேல் சாய்ந்தபடி நின்று கொண்டிருந்தான். 'ஹல்லோ ஸார்!’ அருகே சென்றார். "அப்படியானால் இதற்கு முன்னாலும் நீதானா?" கோபம் கன்னங்களில் குறுகுறு