பக்கம்:பிராயச்சித்தம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 லா. ச. ராமாமிருதம் தெரிஞ்சுதான் பருந்து வந்து வட்டமிடுது. சாகப்போற உசிர் பருந்தைத் தேடிப் போகல்லே. ஸார், பத்தானிக் காரன் முன்னால் எப்படி வந்து உங்களிடம் கெஞ்சறான் கொஞ்சறான் தெரியுமா? தம்பி பணம் வோணுமா? எத்தினி வோணும்? எத்தினி வோணுமானாலும் வாங் கிக்கோ. நீ அஷ்லே கொடுக்கவோனாம். வட்டிமாத்தரம் ஒளுங்காக கொடுத்திட்டிரு போதும். எவன் அஷல் கேக்குறான்? அப்பிடித்தான் சகவாசம் ஆரம்பிக்கிறது. அப்புறம், அப்புறம்...' லேசாகச் சிரித்தபடி, தன் தோளை, முதுகைக் கழுத்துப்புறம், உடம்பைத் தடவிக் கொண்டான். ஏதோ நினைப்பின் பயத்தில், அவன் சிரிப்பு விசனமாயிருந்தது.

    • sufríř, பத்தாணிக்காரன் நாட்டை விட்டுப் போயிடல்லே. போயிட்டான்னு சட்டம் பேசுது நம்மவ னிடமே வாரிசுகளை விட்டுப் போயிருக்கிறான். அவனைக் காட்டிலும் கொடுமையான வாரிசுகள். ஸார், சிறையில் இணைத்துக்கொண்டிருக்கும் கைதிகளைக் காட்டிலும் வெளியிலே மார் தட்டிக்கொண்டு தன்னிச்சையாகத் திரியும் குற்றவாளிகள் எத்தனைபேர் தெரியுமா? கணக் கிட முடியாது, என்னையும் சேர்த்துத்தான். எல்லாம் தெரியும். ஆனால் ஒண்னும் பண்ண முடியாது...'

அவனுக்கு மூச்சு இரைத்தது. அவர் ஸெர்வரை விளித்தார். "ஒரு கப் காப்பி ஸ்ட்ராங்...' 'நாராயணா, நீ ரொம்ப ஆழத்துள் போய்விட்டாய். உன்னை மீட்க முடியாது.” காப்பியை ஒரு முழுங்கு குடித்துவிட்டு அவரை ஒரு தினுசாகப் பார்த்தான்.