பக்கம்:பிராயச்சித்தம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 175 வாதாட முடியாது. உண்மையை என் நெஞ்சுக்கு விரோத மில்லாமல் சொல்லலாம். ஆனால் அதன் நாணயத்தையும் என்னால் பிற மனதுக்குள், என் பதிலுடன் செலுத்த எனக்குச் சக்தியை சிருஷ்டி கொடுக்கவில்லை. சில பதில் களை நிரூபிக்கவே முடியாது. ‘என்னை நம்பு என்று கேட்டாலே நான் சந்தேகத்துக்கு உரியவனாகிறேன். ஆகவே சொல்கிறேன. என் சொல்லுக்கு நான்தான் சாகழி. ஆம், கோமதிமேல் எனக்கேன் இவ்வளவு கரிசனம்? பாசம் நேர்வதற்கு உதவு, காரணங்கள் அவசியமில்லை. நாம் நினைக்கிற மாதிரி பாசங்களில் அப்படி ஒன்றும் அசாதாரணமும் இல்லை. சில பேருக்கு ஒருவரையொருவர் பிடித்துப் போகிறது. அவளுடைய நிலையில் அவளுக்கு என் போன்ற வயதானவனின் பேச்சு, ஒரு தைரியம், துணை, ஆறுதலாக இருக்கலாம். என் வாழ்க்கையிலும், நான் பிரியத்துக்கும் ஆறுதலுக்கும் அரவணைப்புக்கும் ஏங்கினேனோ என்னவோ? இந்த இடத்தில் நான் சொல்ல வேண்டியிருக்கிறது. என் குடும்ப வாழ்க்கையில் நான் துர்ப்பாக்கியன். கோமதி வயதில் எனக்கு ஒரு பெண்அவள் எங்கிருக்கிறாள் என்றுகூட எனக்கு இப்போது தெரியாது. இல்லை இருந்தாள் என்று சொல்ல வேண்டுமா அதுவும் தெரியாது. என் பெண்மேல் பாசமெல்லாம் வடிகால் தேடி, அப்படியே கோமதியிடம் திக்குத் திரும்பி விட்டதோ என்னவோ? ஐயா, நான் ஒரு கல்மிஷமும் இந்த உறவில் அறியேன், அறியோம். இதுபற்றி எனக்குத் தெரிந்த உண்மை இதுதான். சரி விஷயம் தண்டவாளம் மாறுமுன் மீள்கிறேன். இதற்குள், நகையைத் திருட, என் திட்டம் உருக் காட்டி விட்டது. நானும் செயல்பட்டேன். அன்றிரவு ஸ்ேட்ஜியின் டானிக்கில் துர்க்க மாத்திரை யைக் கலந்தேன். ஸ்ேட் ஒரு நோயாளி. ஆஸ்துமா.