பக்கம்:பிராயச்சித்தம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 லா. ச. ராமாமிருதம் 'ஸார், அது ஒரு பெரிய இடத்து நகை'-அவள் குரலில் பயம் தெரிந்தது. அப்பா ஒரு மார்வாடி கடையில் கொஞ்சநாள் கணக்கு வேலை பார்த்தபோது, கடனில் மூழ்கிவிட்ட இந்த நகையை ஒரு சலுகை விலையில் முதலாளியிடமிருந்து வாங்கினார். எந்தக் காரணத்துக் காக, நகைக்குச் சொந்தக்காரர் மார்வாடியிடம் வெச்சுக் கடன் வாங்கினாளோ, அதை மீட்க முடியாதபடி அந்தக் குடும்பம் எப்படி சரிஞ்சிபோச்சோ, நகையை அணிஞ்சுண் டிருந்த சீமாட்டியின் மனம் எப்படித் தவிச்சதோ, அந்தக் குடும்ப சா. ப மும் வயித்தெரிச்சலும் நகையோடு தொடர்ந்துதானே வந்திருக்கும்! என் கலியாணத்தின் போது நகையைக் கழுத்தில் மாட்டி அப்டா அனுப்பிச் சுட் டார். ஒரு ஒரு சமயம் நினைச்சுக்கூடப் பார்க்க முடியல்லே. தக்கப்படி நிதர்சனமும் அப்படித்தானே காட்டிடுத்தே!’’ 'மூட நம்பிக்கை, நம்பிக்கை, அவநம்பிக்கை-எது எதுவென்று இந்த நாளில் தனித் தனியாகப் பிரிக்கவும் முடியவில்லை. ஆனால் எல்லாம் சேர்ந்துதான் வாழ்க்கை. சரி, ரொம்ப நேரமாகிவிட்டது. வரட்டுமா? : ஏதோ யோசனையிலிருந்தவள் கலைந்து திணறிப் போனாள். "என்ன ஸார் திடீர்னு வெறுப்பேத்தறிங்க?" நேரமாச்சு, நான் போகவேண்டும் என்று சொல்வது தப்பா?’’ - 'சரி, என் பாஷையை மாத்திக்கறேன். எங்கே போப் போlங்க ரூம் ஏதானும் எடுத்திருக்கீங்களா?” "என் பிழைப்பைத்தான் பார்த்தையே, ரூம் எடுக்கிற வன் மாதிரி உனக்குத் தோனறதா?” 'அப்போ எங்கே படுக்கப் போlங்க? சென்னைப் பட்டணத்தில் எந்த இடத்தில் வாசல் திண்ணையோடு வீடு இருக்கு, எனக்குக் காட்டுங்களேன். இடம் போறல்