பக்கம்:பிராயச்சித்தம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 லா. ச. ராமாமிருதம் பிடிவாதத்தினால் என்னைச் சுரணையில்லாமல் ஆக்கிக் கொண்டிருக்கிறாளா? உடல் உழைப்பினால் வயிறு வளர்க்கும் காத்திரமோ எனக்கு இல்லை. என்னதான் செய்யப் போகிறேன். ஊரை விட்டுப் போய்விடலாமா? இங்கு இருந்தால்தானே வம்பு? இத்தனை பரந்த பூமியில் என் ஒண்டியாளுக்கு இடமில்லாமல் போய்விடுமா?

    • G佥打击!”” திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தால் ஒரு சிகப்புத் தலைப்பா ஸெல்யூட் அடித்து நின்றது.

'இன்ஸ்பெக்டர் உங்களைக் கூப்பிடறார்.' "கூப்பிடுகிறாரா? எதற்கு? சுற்றும்முற்றும் பார்த் தார். எதிரே போலீஸ் ஸ்டேஷன், 'எனக்குத் தெரியாது.' கோபம் குறுகுறுத்தது. கூடவே ஒரு சிறு பயம். "வரமாட்டேன் என்று போய்ச் சொல்.’ 'உங்களை request பண்ணிக்கிட்டதா சொல்லச் சொன்னாரு.* மேலும் எதிர்க்க வலுவற்று அவன் முன் போக பின் நடந்தார். - அறையுள் நுழைந்ததும் இன்ஸ்பெக்டர் இருக்கையி னின்று எழுந்து நின்று கையைப் பற்றிக் குலுக்கினார். 'வாங்க தர்மராஜன், எப்படியிருக்கீங்க? நீங்கள் போறதைப் பார்த்தேன், அமருங்க." தர்மராஜன் அமரவில்லை. கையை விடுவித்துக் கொண்டு தன் முதுகின் பின்னால் இழுத்துக் கொண்டார். இன்ஸ்பெக்டர் கவனிக்காததுபோல் 'என்னை நினை விருக்கிறதா ளார்?’’